50 வருஷம் நான் எழுதிய பாடல்களில் பெஸ்ட் அதுதான்!.. வாலி சொன்ன அந்த பாட்டு!...
1958ம் வருடம் முதல் 2013ம் வருடம் வரை தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சியவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை மூன்று தலைமுறைகளுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட வாலி பாடலாசிரியராகும் ஆசையில் சென்னை வந்து பல முயற்சிகளுக்கு பின் திரைப்படங்களில் பாடல்களை எழுதும் வாய்ப்பை பெற்றார்.
வாலியின் பல பாடல்களை பலரும் அது கண்ணதாசன்தான் எழுதியதுதாக நினைத்த காலம் உண்டு. அப்படி கண்ணதாசனுக்கு இணையாக பாடல்கள் எழுதியிருக்கிறார் வாலி. குறிப்பாக எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியராக வாலி இருந்தார். எம்.ஜி.ஆர் அரசியல்ரீதியாக தன்னை மக்களிடம் புரமோட் செய்வதற்கு வாலியின் பாடல்கள் பெரிதும் உதவின.
அதேநேரம் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று வாலி சொல்லியிருப்பது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான மௌன ராகம் படத்தில் எழுதிய ஒரு பாடலைத்தான். பல வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா மேடையில் பேசிய வாலி ‘தமிழ் சினிமாவின் பெருமையை முதன் முதலாக இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது மணிரத்தினம்தான். அது யாராலும் மறக்க முடியாத உண்மை. நிறைய பேர் ஹிந்திக்கு சென்று படம் எடுத்தாலும் இவரை போல் அங்கு ஹிட் கொடுத்தது இல்லை.
மணி மணியா ஷாட் எடுப்பார்.. ரத்தின சுருக்கமா வசனம் எழுதுவார். அவரின் மௌன ராகம், அஞ்சலி, தளபதி அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கும் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். பாட்டை கேட்டு வாங்குவது என்பது ஒரு பெரிய சாமர்த்தியம். திறமையை குறைத்து மதிப்பிடும்படி பேசினால் கவிஞர்களுக்கு கோபம் வந்துவிடும். ஆனால், அதையெல்லாம் சமாலித்து நல்ல வார்த்தைகளை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்.
என்னிடம் நண்பர் ஒருவர் ‘50 வருடங்களாக நீங்கள் சினிமாவில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதியதிலேயே சிறந்தது என்று நீங்கள் நினைக்கும் பாடல் எது?’ என்று கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில் ‘மௌனராகம் படத்தில் எழுதிய மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ’ பாடல்தான்’ என வாலி பேசியிருந்தார்.
