வாலி சொன்ன வார்த்தை.. சினிமாவில் ஜேசுதாஸுக்கு கிடைத்த வாய்ப்பு.. ஒரு பிளாஷ்பேக்...
1960களில் கண்ணதாசன் கோலோச்சிக்கொண்டிருந்த போதே அவருக்கு நிகராக தமிழ் திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல் வந்து இருவரும் பிரிந்தபோது எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் வாலியை பாடல்கள் எழுத வைத்தார்
. இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக மக்களிடம் நெருக்கமாக்கிய ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘ நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட பாடல்களை வாலிதான் எழுதினார்..
இந்நிலையில்தான், பல வருடங்களுக்கு முன்பு ஒரு யுடியூப் சேனலுக்கு கவிஞர் வாலி கொடுத்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரிப்பில் ‘கொஞ்சும் குமரி’ என்கிற திரைப்படம் உருவானது. அந்த படத்தில் நடிகை மனோரமா முதன் முதலாக கதாநாயகியா நடித்தார். அவருக்கு ஜோடியாக எம்.எஸ் மனோகர் நடித்தார். அந்த படத்திற்கு வேதா என்பவர் இசையமைத்தார். என்னை பாடல் எழுத கூப்பிட்டார்கள்..
மாடர்ன் தியேட்டர்ஸை பொறுத்தவரை பண விஷயத்தில் கரெக்டாக இருப்பார்கள். பாடல்கள் எழுதி முடித்தவுடன் நாம் தங்கியிருக்கும் அறைக்கு பணம், ஊருக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் எல்லாமே வந்துவிடும். என்னை அழைத்து ‘நான்கு நாட்கள் இங்கேயே தங்கி அனைத்து பாடல்களையும் எழுதி கொடுத்து விடுங்கள்’ என்று கேட்டார்கள். ஆனால் அவர்கள் சொன்ன தொகை எனக்கு குறைவாக தெரிந்தது.. அதை கூறினேன்..
சுந்தரம் சாரிடம் கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்கள்.. அதன்பின் வந்து ‘நீங்கள் போகலாம்’ என கூறிவிட்டார்கள்.. நானும் சென்று விட்டேன்.. அதன்பின் அடுத்த நாளே எனக்கு ‘உடனே கிளம்பி வாங்க’ என்று தந்தி வந்தது.. நேரில் சென்று என்னவென கேட்டேன்.. ‘அப்படி என்றால் நீங்கள் கேட்ட பணத்தை கொடுப்பதற்கு ஒப்புக் கொள்கிறோம் என்று அர்த்தம்’ என்று கூறினார்கள்..
அந்த படத்தின் இசையமைப்பாளர் வேதாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.. அப்போது அங்கே ஒரு வாலிபர் மிகவும் ஒல்லியாக ர் அமர்ந்திருந்தார்./. அவர் நன்றாக பாடுவதாகவும் ஆனால் டி.ஆர் சுந்தரத்திற்கு ஏனோ அவர் மீது நம்பிக்கை இல்லை என்றும் வேதா கூறினார்.. மேலும் ‘நீங்கள் கொஞ்சம் ஆங்கிலம் நன்றாக பேசுவீர்கள்.. சுந்தரம் சாரிடம் சொல்லி இந்த பையனுக்கு பாடுவதற்கு சம்மதம் வாங்கி கொடுங்கள்’ என்று கூறினார்.
நானும் டி ஆர் சுந்தர் சுந்தரம் சந்தித்து பேசினேன் அந்த பையன் மிகவும் அருமையாக பாடுகிறான் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறினேன் உங்களுக்கு அப்படி தூண்டுகிறதா என்று கேட்டார் ஆமாம் என்று சரி என்று ஒப்புக்கொண்டார் அவர் தான் அப்படி நான் வாய்ப்பு கொடுத்த நபர் தான் கே ஜே ஏசுதாஸ் அதன்பின் பல படங்களிலும் பாடி அவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்தார் என வாலி கூறி இருக்கிறார்.
