'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'-ல நடிக்கவே மாட்டேன்னு சத்யராஜ் சார் சொன்னார். ஆனா... பொன்ராம் சொன்ன ஃபிளாஷ்பேக்!
ஒரு சில படங்கள் அந்த நடிகரின் ரூட்டை அப்படியே மாற்றி அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அப்படி நம்ம சிவகார்த்திகேயனுக்கு அமைந்த படம் தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.
இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் தான் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக ஶ்ரீதிவ்யா நடித்திருந்தார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருந்தார்.
சத்யராஜின் கேரக்டரும், அவரது நடிப்பும் இப்படத்தில் ஹைலைட்டாக இருந்தது. சமீபத்தில், இயக்குநர் பொன்ராம் நடிகர் சத்யராஜ் குறித்து பேசுகையில் "நான் சத்யராஜ் சாரை மீட் பண்ணி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' முதல் பாதி கதையை சொன்னேன்.

அவர் பிடிக்கலன்னு சொல்லிட்டார். அப்புறம் நான் சொன்னேன், சார் இந்த கேரக்டர் நீங்க பண்ணப் போறீங்கன்னு நினைச்சு நான் கதை பண்ணல. புரொடக்ஷன்ல தான் உங்ககிட்ட போய் சொல்ல சொன்னாங்க, நான் வந்து சொல்லிட்டேன். ஆனா, நீங்க பண்றீங்கன்னா நான் கண்டிப்பா திரும்ப கதைல வொர்க் பண்றேன் சாருன்னு சொன்னேன்.
அதுக்கு அவர் நீங்க என்ன பண்ணாலும் இந்த ரோல்ல நான் நடிக்கவே மாட்டேன் பொன்ராம் சாருன்னு சொன்னார். அப்புறம் நான் இதோட க்ளைமேக்ஸ் மட்டும் கேட்டுட்டு முடிவு பண்ணுங்கன்னு சொல்லி சொன்னேன். க்ளைமேக்ஸ் சொன்னதும் என்கிட்ட sorry சொல்லிட்டு, இந்த படத்தை நான் தான் பண்றேன்னு சொல்லிட்டார்.
ஆனா, எனக்காக கதைல கொஞ்சம் வொர்க் பண்ணுங்க பொன்ராம் சார் என் ஸ்டைலுக்கு தகுந்த மாதிரின்னு சொன்னார். நானும் அவர்கிட்ட பண்றேன் சாருன்னு சொல்லிட்டு, அதுக்கு அப்புறம் full-ஆ ஸ்கிரிப்ட்ல அவர் கேரக்டருக்காக வொர்க் பண்ணி சொன்னேன். அவருக்கு ரொம்ப குஷியாயிருச்சு. அதுக்கு அப்புறமா ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு முழுசா சப்போர்ட் பண்ணி அந்த ரோல்ல நடிச்சு கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.
