நடிகையிடம் சொல்லாம திடீரென கட்டிப்பிடித்த பிரபுதேவா... அப்புறம் நடந்தது என்ன?

 
prabhu deva

பிரபுதேவாவை தென்னிந்தியாவின் மைக்கேல்ஜாக்சன்னு ஒரு காலத்துல சொல்வாங்க. அவரது ஆட்டம் புயல்வேகத்தில் இருக்கும். நடிப்பிலும் அவர் வெளுத்து வாங்கினார். இயக்கத்திலும் பட்டையைக் கிளப்பினார். இப்படி பல அவதாரங்களை எடுத்தவர் பிரபுதேவா.

அவரது சார்லி சாப்ளின் படம் செம மாஸாக இருக்கும். பாடல்களும் சூப்பர்தான். இந்தப் படத்தில் ஒரு தரமான சம்பவம் ஒன்று நடந்தது. அதுபற்றி பிரபல நடிகை ஷர்மிளி என்ன சொன்னாருன்னு பாருங்க. 

சார்லி சாப்ளின் படத்தில் ஃபைல் எங்கேன்னு கேட்பார் பிரபுதேவா. எனக்கு காது கேட்காது. மயில் இங்கே எங்கேடா இருக்குன்னு கேட்பேன். அதுக்கு அவர் திடீர்னு சொல்லாம கட்டிப்புடிச்சி காதை கடிச்சிடுவாரு. பண்ணின உடனே ஆன்னு கத்திட்டேன்.

எப்படி வந்துருக்கு சீனுன்னு கேட்டார். சார் என்ன சொல்லாம நீங்க இப்படி பண்ணிட்டீங்கன்னு கேட்டேன். சொல்லாம வந்ததால தான் அப்படி வந்துருக்கு சீனுன்னு சொன்னாரு. அந்த வாய்ஸ் கிடைச்சதுன்னு சொன்னாருன்னு சிரிக்கிறார் நடிகை ஷர்மிளி. 

 

Tags

From Around the web