அசாதாரணமான காரியத்தை அசால்டாக செய்த பாக்கியராஜ்... பிரபலம் தந்த சூப்பர் தகவல்!

 
bhagyaraj

எம்ஜிஆர் நடித்த அவசர போலீஸ் 100 படத்துக்கு பாக்கியராஜ் திரைக்கதை எழுதியதைப் பற்றி சொல்ல முடியுமான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன அட்ரா சக்கை பதில் இதோ..! 

ஏற்கனவே ஒரு இயக்குனர் எழுதி படமாக்கப்பட்ட சில காட்சிகளுக்கு ஏற்ப ஒரு திரைக்கதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான விஷயத்தையும் சர்வ சாதாரணமாக பாக்கியராஜால் செய்ய முடிந்தது என்றால் அதுக்கு முக்கியமான காரணம் திரைக்கதைப் பற்றி அவருக்கு இருந்த தெளிவு என்கிறார் சித்ரா லட்சுமணன்.  

அவசர போலீஸ் 100 படத்தில் தான் சில சிஜி வேலைகளைச் செய்து எம்ஜிஆருடன் பாக்கியராஜ் நடித்து இருப்பது போல காட்சிகள் படமாயின. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு. காரணம் பாக்கியராஜின் சூப்பர் திரைக்கதை தான். 1990ல் வெளியானது. இது ஸ்ரீதர் 1977 ல் எம்ஜிஆரை வைத்து இயக்கிய அண்ணா நீ என் தெய்வம் என்ற படம்.

நாலாயிரம் அடி வரை எடுக்கப்பட்ட இந்தப் படம் சில பல காரணங்களால் நின்று போனது. அந்த ரீலை வேஸ்ட் பண்ணாதவகையில் எடுக்கப்பட்ட படம் தான் அவசர போலீஸ் 100 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கௌதமி, சில்க், நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 

Tags

From Around the web