நடிகவேளைப் பாராட்டிய பெரியார்... என்ன சொன்னாருங்கறதுதான் விசேஷம்!
தமிழ்சினிமா உலகில் நடிகவேள் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் எம்.ஆர்.ராதா. இவரைத் தந்தை பெரியார் மனம் திறந்து பாராட்டியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
தந்தை பெரியாருக்கும், சினிமாவுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பது எல்லாரும் அறிந்த விஷயம். சினிமாவே பிடிக்காதவராக இருந்த தந்தை பெரியார், ஒரு நடிகரின் பெயரில் மன்றத்தைத் தன்னுடைய பெரியார் திடலிலே திறந்தார் என்றால், அது நடிகவேள் எம்ஆர்.ராதாவின் மன்றம் மட்டுமே. நான் எப்படி சமுதாயத்தில் மாறுதல்களையும், புரட்சிக்கருத்துகளையும் கொண்டு வருவதற்காக பாடுபட்டு வருகின்றேனோ அதே மாதிரி ராதா அவர்களும், நல்ல நல்ல கருத்துகளை லிடாப்பிடியாக கொண்டு வருவதற்குப் பாடுபட்டு வருகின்றார்.
அதே மாதிரி நாடகத்துறையிலும் நல்ல நல்ல கருத்துகளை விடாப்பிடியாக நடத்திக் கொண்டே வருபவர். பொதுவாக எல்லா நடிகர்களும் ரசிகர்கள் பின்னாடியே போவாங்க, ஆனால் ரசிகர்கள் தன்பின்னால் வர வேண்டும் என்று நினைத்தவர் நடிகவேள் எம்ஆர்.ராதா. ரசிகர்களுக்குப் பிடிச்ச கருத்தை அவர் மேடையில் எப்பவும் பேச மாட்டார். ரசிகர்களுக்குப் பிடித்த கருத்தை எந்நாளும் அவர் மேடையில் பேச மாட்டார். தான் என்ன கருத்தைச் சொல்லணும்னு நினைக்கிறாரோ அந்தக் கருத்தைத் தான் எல்லா மேடைகளிலும் அவர் ஒலிப்பார்.
நான் நாடகங்களை ரொம்பவே ரசிப்பேன். அந்த நாடகங்களில் நடிக்கிறவங்க கூட எனக்கு எந்தக் காலத்திலும் உறவு இருந்தது இல்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு நாடகக்கலைஞரோடு எனக்கு உறவுன்னா, அது எம்ஆர்.ராதாவுடன் மட்டுமே என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் பதிவு செய்துள்ளார் தந்தை பெரியார்.
