அப்பாவுக்கு கேன்சர்!.. மாசம் ரூ.300... ரொம்ப கஷ்டப்பட்டேன்!.. பார்த்திபன் ஃபீலிங்..
பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர்களில் முக்கியமானவர் பார்த்திபன். புதிய பாதை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்.. அதன்பின் உள்ளே வெளியே உள்ளிட்ட பல திரைப்படங்களையும் இயக்கி நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
பாரதிராஜாவுக்கு எப்படி பாக்யராஜ் இருந்தாரோ அப்படி பாக்கியராஜிடம் முக்கிய உதவியாளராக இருந்தவர் பார்த்திபன். பாக்கியராஜுக்கு என்னென்ன தேவை, அவருக்கு என்ன செய்தால் பிடிக்கும் என எல்லாவற்றையும் தெரிந்து அதை பார்த்து பார்த்து செய்வார் பார்த்திபன்..சமீபத்தில் கூட பாக்யராஜ் இறந்த போது அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் வை உடன் இருந்தார் பார்த்திபன். சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் தனது குரு பாக்யராஜ் பற்றிய பல உருக்கமான தகவல்களையும் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ஒரு தகவலை பார்த்திபன் பகிர்ந்துள்ளார். ‘பாக்யராஜ் சார் கிட்ட நான் உதவியாளரா சேரும் போது டப்பிங், நாடகமும் என மாசம் 6 ஆயிரம் சம்பாதித்து கொண்டிருந்தேன். அப்போ என் அப்பாவுக்கு கேன்சர் இருந்தது. அவருக்கு மாத்திரை மட்டும் மாசம் 270 ஆகிடும். பாக்யராஜ் சார்கிட்ட அசிஸ்டென்டா சேரும் போது எனக்கு மாசம் ரூ.300 பேட்டான்னு சொன்னாங்க.. என் அப்பா மாத்திரை 270 ஆகிடும்.. மீதி 30வை வச்சி எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது என்று யோசித்தேன்.. ஆனாலும் துணிந்து அவரிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.
