ஃபர்ஸ்ட் விஜய் சாருக்கு 'சுக்ரன்'-ல நடிக்குற interest-ஏ இல்ல. ஆனா... சுவாரஸ்யத் தகவல் சொன்ன இயக்குநர் ராஜேஷ்.எம்!

 
Vijay sukran rajesh m

'தளபதி' விஜய் இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறார். இவரின் தந்தை தான் பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவர் ரவி கிருஷ்ணாவை வைத்து இயக்கிய படம் தான் 'சுக்ரன்'. எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்த இந்த படத்தை ரவி கிருஷ்ணாவின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஏ.எம்.ரத்னம் தான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஶ்ரீ சூர்யா மூவீஸ்' மூலம் விநியோகம் செய்தார்.

இதில் விஜய் சிறப்பு தோற்றத்தில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். 'சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ்.எம் இந்த படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி இருந்தார்.

Vijay SA Chandrasekar

சமீபத்தில், இயக்குநர் ராஜேஷ்.எம் கொடுத்த பேட்டியில் 'சுக்ரன்' குறித்து பேசுகையில் "விஜய் சாருக்கு ஃபர்ஸ்ட் 'சுக்ரன்' படத்துல நடிக்குறதுக்கு interest-ஏ இல்ல. எங்களுக்குமே முதல்ல அப்படி ஒரு ஐடியாவே இல்ல.

அப்புறம் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தான் முடிவு பண்ணி, விஜய் சார்கிட்ட போய் கதை சொன்னார். அப்போ அவருக்கு கதை கொஞ்சம் பிடிச்சிருந்துச்சு. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சாரும் அவர்கிட்ட போய் பண்ண சொன்னார்.

Sukran shooting spot

அப்புறம் எங்ககிட்ட விஜய் சார் வந்து, நான் பண்ணா வொர்க்கவுட் ஆகுமாடான்னு கேட்டுட்டு, ஏதாவது சொதப்புச்சுன்னா நீங்கதான்டா பொறுப்புன்னு சொன்னார். இல்ல சார் நல்லா இருக்கும் சார் பண்ணுங்கன்னு நான் சொன்னேன்.

அப்போ விஜய் சார் dates கம்மியா தான் கொடுத்திருந்தார். ஏன்னா, அவர் இதை முடிச்சிட்டு 'சச்சின்' படத்தோட ஷூட்டுக்கு போக வேண்டியதா இருந்துச்சு. ஒரு 5 நாட்களில் விஜய் சாரோட எல்லா காட்சிகளையும் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ஷூட் பண்ணி முடிச்சார்" என்று கூறியுள்ளார்.

From Around the web