அபூர்வ ராகங்கள் ஷூட்டிங்!.. கமலுடன் முதல் சந்திப்பு!. அவரிடம் ரஜினி பேசியது இதுதான்!..

 
rajini kamal


தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி பின் ரஜினி - கமல் என்கிற போட்டி உருவானது. ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் திரையுலகில் 50 வருடங்களுக்கும் மேல் இரு நடிகர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திக் கொள்கிறார்கள்.. ஒருவர் ஒருவரை மதிக்கிறார்கள் என்றால் அதற்கு உதாரணமாக ரஜினி - கமலை மட்டுமே சொல்ல முடியும்.

ஏனெனில், காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறாமை, சூழ்ச்சி, சூது, சுயநலம் அதிகமாக கொண்டது சினிமா உலகம். அப்படி இருந்தும் இத்தனை வருடங்கள் நட்பை பேணி பாதுகாக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர்களிடம் பல நடிகர்களும் படம் கற்க வேண்டும்..

இப்போது கூட சினிமா தொடர்பான ஏதேனும் சந்தேகம் என்றால்,  குழப்பம் என்றால் ரஜினியின் தொலைப்பேசி அழைப்பு கமலுக்குதான் போகும். ரஜினி தற்போது நடித்து வரும் தர்மன் திரைப்படத்தை கமல்தான் தயாரித்து வருகிறார். அதோடு நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்தும் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியும், கமலும் தங்களின் நட்பு தொடர்பான பல அனுபவங்களை, நினைவுகளை, பல சினிமா விழாக்களிலும், பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்கள்..

rajini kamal

இந்நிலையில், கமல்ஹாசனை ரஜினி முதல் முதலாக சந்தித்தபோது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி பார்ப்போம்:

பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. அதுதான் அவருக்கு முதல் திரைப்படம். ஆனால், கமல் அப்போதே பெரிய ஸ்டாராக இருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றவுடன் கமலை பார்த்த ரஜினி அவரிடம் சென்று ‘என் பெயர் சிவாஜி.. நான் பெங்களூரிலிருந்து வருகிறேன்.. நீங்கள் நடித்த சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தை பார்த்தேன்.. மிகவும் சிறப்பாக நடத்திருந்தீர்கள்’  என ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார்.. அதற்கு கமல் எதுவும் பேசாமல் புன்னகையுடன் கடந்து சென்றிருக்கிறார். இதுதான் ரஜினிக்கும் கமலுக்கும் நடந்த முதல் உரையாடல்.

Tags

From Around the web