பாக்யராஜ் கேட்டார்!. நான் நடிச்சிருக்கணும்!.. ஃபீல் பண்றேன்!.. ஓப்பனாக சொன்ன ரஜினி!...

 
bhagyaraj rajini

பாக்யராஜ், ரஜினி இருவருமே தமிழ் சினிமாவில் சமகாலத்தில் வளர்ந்தவர்கள்தான். ஒருபக்கம் ரஜினி நடிகராக பிரபலமானது போலவே பாக்கியராஜ் இயக்குனர் மற்றும் நடிகராக பிரபலமானார். ரஜினி ஆக்சன் படங்களில் நடிக்க, பாக்கியராஜ் பெண்களை கவரும் கதை, திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடித்தார்.

இன்னும் சொல்லப்போனால் ரஜினி, கமலை விட அதிக பெண் ரசிகைகள் அப்போது பாக்யராஜுக்குதான் இருந்தார்கள். எனவே பாக்யராஜ் மீது ரஜினிக்கு எப்போதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. பாக்யராஜ் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினி கேட்டுக் கொண்டதற்காக பாக்யராஜ் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார்.

பாக்யராஜ் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை கூறியிருந்தார், நான் தயாரித்து, இயக்கி நடித்த வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் ரஜினியை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கலாம் என்று ஆசைப்பட்டு அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதில் எனக்கு வருத்தம் இருந்தது. ஏனெனில் அவர் கேட்டவுடன் நான் சிகப்பு மனிதன் படத்தில் நான் நடித்தேன்.
அவர் என்னுடைய படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிய பிறகு அவரை நான் வற்புறுத்து விரும்பவில்லை. ஆனால் ஒரு மேடையில் இதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.. பாக்யராஜ் என்னிடம்தான் முதலில் கேட்டார். நான் நடித்து கொடுத்திருந்தால் அவர் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மீண்டிருப்பார்.. அதை நான் செய்ய தவறிவிட்டேன். ஒரு டத்தில் கெஸ்ட் ரோலில் நடிடுத்தால் எல்லா படத்திலும் கேட்பார்கள் என நினைத்தே அதை தவிர்த்தேன் என ரஜினி சொன்னார்’ என பாக்யராஜ் கூறியிருக்கிறார். அதன்பின் அந்த வேடத்தில் தெலுங்கு நடிகர் சாய் குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web