ரஜினி வீட்ல இல்ல.. அதனால சரத்குமார் நடிச்சாரு!.. சூர்யவம்சம் உருவான கதை!..
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் விக்ரமன் இயக்கி சரத்குமார், ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து 1997ம் வருடம் வெளியான திரைப்படம் சூர்யவம்சம். சரத்குமார் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக ஆனந்தராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் மணிவண்ணன் இடம் பெற்ற காமெடி காட்சிகளும், பாடல் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு சூர்யவம்சம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. சரத்குமாரின் கெரியரிலும் இது ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தின் மெஹா வெற்றிக்கு பின் மிகவும் பிஸியான ஒரு நடிகராகவும் சரத்குமார் மாறினார்..
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்‘இந்த படம் பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். ஒருநாள் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் ‘ஆர்.பி.சவுத்ரி சார் எனக்கு போன் பண்ணாரு.. விக்ரமன் ஒரு கதை சொன்னாரு.. ரொம்ப நல்லா இருக்கு.. இது ரஜினி சார் பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்’ என்று சொன்னார்.
நானும் ரஜினி சார் கிட்ட இந்த கதையை சொல்லலாம்னு அவரு வீட்டுக்கு போனேன். ஆனா அப்ப அவர் வீட்டில் இல்லை. சவுத்ரி சாருக்கு போன் பண்ணி ரஜினி சார் பாக்க முடியலன்னு சொன்னேன். உடனே அவர் ‘சரி விடுங்க.. ரஜினி பண்ணா என்ன சரத்குமார் பண்ண என்னன்னு சொல்லி அந்த படம் பண்ணாரு.. அப்படி உருவான சூர்யவம்சம் சூப்பர் ஹிட்’ என்று சொல்லியிருக்கிறார்.
