ரஜினிக்கே பாடிகார்டாக சென்ற விஜயகாந்த்... அப்போவே அவ்ளோ கெத்தா?

 
rajni, vijayakanth

 

 

இன்று கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்த நாள். அவர் தமிழ்சினிமாவில் தனக்கென தனியாக மற்றவர் ரசிக்கும்படி தடம் பதித்தவர். கோபம் வந்தால் கண் சிவக்கும். சண்டை என்றால் அனல் பறக்கும். பாசம் என்றால் நெஞ்சம் நெகிழும். ரசிர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த விஜயகாந்த் பற்றியும், ரஜினிக்கு அவர் பாடிகார்டாக சென்றது குறித்தும் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் என்ன சொல்றாருன்னு பாருங்க. 

கேப்டன் விஜயகாந்த் மீது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாசமா இருந்தாரு. கேப்டனும் பேசும்போது ரஜினியை அண்ணன்னுதான் சொல்வாரு. நான் வந்து மதுரையில இருக்கும்போது ரஜினிக்கு பார்டிகட்டா ஜிம்பாயா போயிருக்குறேன்னு எங்கிட்ட விஜயகாந்த் சொல்லிருக்காரு என்கிறார் மீசை ராஜேந்திரன். ரஜினி தனது படம் ஒன்றின் 50வது நாள் விழாவுக்கு மதுரை சென்றாராம். அவருடன் ஸ்ரீபிரியா, விஜயகுமாரும் சென்றுள்ளனர். இனிக்கும் இளமை படத்தில் விஜயகாந்த் நடிக்க காரணமானவர் மர்சூர் பாய். அவர் தான் அப்போது அந்த ரஜினி படத்தின் விநியோகஸ்தராம். அவருதான் விஜயகாந்திடம் ரஜினி வருவதாகவும், அதற்கு நீ தான் ரூம்ல இருந்து தியேட்டருக்கு அழைத்துச் சென்று திரும்பவும் ரூம்ல விடணும்னு சொன்னாராம். அப்போதுதான் விஜயகாந்த் ரஜினிக்கு பாடிகார்டா போனேன் என்று என்னிடம் சொன்னார். அப்போது ரஜினி விஜயகாந்தைப் பார்த்ததும், நீங்க நல்லாருக்கீங்களே... நடிக்கலாமே என்றும் சொன்னாராம். 

Tags

From Around the web