ஏ.வி.எம் நிறுவனம் கேட்டும் நடிக்க மறுத்த ராமராஜன்!.. காரணம் இதுதான்!...
தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் கிராமத்து கதைகளில் நடித்து வெற்றி படங்களை கொடுத்தவர் ராமராஜன், இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழகத்தில் இரண்டு தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது. இன்னும் சொல்லப்போனால் ரஜினி, கமல் படங்களை விட ராமராஜன் படங்கள் அதிக வசூலை பெற்றது. ராமராஜனின் கரகாட்டக்காரன் படம் செய்த சாதனையை ரஜினி, கமல் படங்கள் கூட செய்யவில்லை. அந்த அளவுக்கு மக்களுக்கு நெருக்கமான ஒரு நடிகராக ராமராஜன் இருந்தார்.
பெரிய தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்காமல் புதிய புதிய தயாரிப்பாளர்களை ராமராஜன் உருவாக்கினார். மிகவும் குறைவான பட்ஜெட்டில் படங்களை எடுத்து தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் என எல்லோருக்கும் லாபத்தை கொடுக்கும் படங்களை கொடுத்தார்..
ஒருமுறை ஏ.வி.எம் நிறுவனம் ராமராஜனை வைத்து படம் எடுக்க விரும்பி அவரை அணுகியது. ஆனால் ராமராஜனோ ‘ நீங்க பெரிய தயாரிப்பாளர். எனவே, பெரிய நடிகர்களை வைத்து படம் எடுங்கள்.. நான் சின்ன சின்ன தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வருகிறேன்.. என்னால் உங்கள் படத்தின் நடிக்க முடியாது’ என சொல்லிவிட்டார். அதுதான் ராமராஜன்!..
