வெறும் 6 ரூபாய் டிக்கெட்.. 10 லட்சம் வசூல்! முரளியின் இதயம் படம் குறித்து வைரல் தகவல்!

 
வெறும் 6 ரூபாய் டிக்கெட்.. 10 லட்சம் வசூல்! முரளியின் இதயம் படம் குறித்து வைரல் தகவல்!

1991-ம் ஆண்டு அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில், முரளி மற்றும் ஹீரா நடிப்பில் வெளியான திரைப்படம் இதயம் . ஒருதலைக் காதலை மிகவும் ஆழமாகவும், எதார்த்தமாகவும் சொன்ன இப்படம், அந்த காலகட்டத்து இளைஞர்களை பைத்தியமாக்கியது. இப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது இசைஞானி இளையராஜாவின் இசை தான். படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து மாபெரும் வெற்றியடைந்தன. குறிப்பாக பின்னணி இசை நம்மை எங்கோ கொண்டு செல்லும். கல்லூரி மாணவர் வேடம் என்றால் முரளிக்கு அல்வா சப்பிடுவது மாதிரி. இந்த படத்தில் அவரது அமைதியான நடிப்பில் அசத்தியிருப்பார். முரளியின் திரைப்பயணத்தில் இதயம் அவருக்கு ஒரு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் பிரபலமான ரோகிணி திரையரங்கு உரிமையாளர் இதய படம் குறித்து கூறிய தகவல் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்படுகிறது.

அவர் கூறுகையில், "இதயம் படத்தை எங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக வாங்கச் சென்றோம். அப்போது, சென்னைக்கு வெளியே உள்ள திரையரங்குகளுக்குத்தான் தர முடியும் என்று கூறி 90,000 ரூபாய் விலை கேட்டார்கள். நான் அவர்களிடம் பேரம் பேசி இறுதியாக 80,000 ரூபாய்க்கு படத்தை வாங்க ஒப்பந்தம் செய்தேன் என்று தெரிவித்தார்.

வெறும் 6 ரூபாய் டிக்கெட்.. 10 லட்சம் வசூல்! முரளியின் இதயம் படம் குறித்து வைரல் தகவல்!

மேலும் அவர்கூறியபோது, நான் அந்தப் படத்தை 80 ஆயிரம் கொடுத்து வாங்கியபோது, என்னைச் சுற்றி இருந்த பலரும், 'முரளி படத்திற்கு இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்காதீர்கள், அந்தப் படம் அந்த அளவுக்கு ஒர்த் கிடையாது, கலெக்‌ஷன் வராது என்று என்னை எச்சரித்தனர் என்றார். ஆனால், படம் வெளியாகி அனைவரின் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கியது. எங்கள் திரையரங்கில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, சுமார் 10 லட்சம் ரூபாய் வரை மாபெரும் வசூலைக் குவித்தது. அந்த காலகட்டத்தில் ஒரு டிக்கெட்டின் விலையே வெறும் 6 ரூபாய் தான். அப்படி இருந்தும் 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு படம் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்தது எங்கள் தியேட்டர் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று அவர் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

ரோகினி திரையரங்கு திறந்தபோது வெளியிட்ட முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web