சாவித்திரிக்குப் பாட மறுத்த எஸ்.ஜானகி... ஆனா அடுத்து நடந்த ட்விஸ்ட் இதுதான்!
அண்மையில் மறைந்த இசைக்குயில் எஸ்.ஜானகிக்குப் மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்த பாடல்னா அது சிங்கார வேலனே தேவா தான். கொஞ்சும் சலங்கையில் இடம்பெற்ற பாடல் இது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு தான் இசை அமைத்தார். அந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடியதற்குப் பின்னால ஒரு கதை இருக்கு. இதை அவரே ஒரு பத்திரிகை பேட்டியில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
மிஸ்ஸியம்மா படத்துல நடித்த சாவித்திரிக்காக ஒரு அற்புதமான பாடலைப் பாடி இருந்தார் எஸ்.ஜானகி. அந்தப் பாடலை சாவித்திரி கேட்டு விட்டு இவரோட குரல் வேணாம். எனக்கு எப்போதும் பாடக்கூடிய பி.லீலாவையே கொண்டு வந்து பாட வைங்கன்னு அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் தெரிவித்துள்ளார். அவரும் வேற வழியில்லாம ஜானகி பாடிய பாடலைத் தூக்கிப் போட்டு விட்டு லீலாவை வைத்துப் பதிவு செய்து விட்டார்.
இந்த விஷயம் தெரிந்த எஸ்.ஜானகி இனி சாவித்திரிக்குப் பாடலே பாடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். கொஞ்சும் சலங்கை படத்தில் இந்தப் பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பு எஸ்.ஜானகிக்கு வந்தது. இத சாவித்திரிக்காகப் பாடும் பாடல்னா நிச்சயமா நான் பாட மாட்டேன் என்றும் சொல்லி விட்டார். எஸ்.எம்.சுப்பையா நாயுடுக்கிட்ட நேரடியாக சொல்லிவிட்டார் ஜானகி. அவங்களைப் பொருத்தவரைக்கும் நாதஸ்வர இசையோடு பாடலைப் பாடக்கூடிய ஒரு பாடகியே உங்களுக்கு சரியா அமையல. எஸ்.ஜானகி பாடுனாலே அந்தப் பாட்டு சிறப்பாக அமையும் என்பது எல்லாருடைய கருத்து.
அதனால எஸ்.ஜானகிக்கிட்ட சொல்லும்போது இது சாவித்ரி பாடுற மாதிரி நாங்க படம் எடுக்கப் போறது இல்லை. குசலக்குமாரி நடனம் ஆடுவது போல் தான் எடுக்கப் போறோம். அதனால நீங்க பாடிக் கொடுங்கன்னு கேட்டதாகவும் எஸ்.ஜானகியே தெரிவித்துள்ளார். அதனால தான் இந்தப் பாட்டை பாடுனாங்களாம் ஜானகி. பாட்டைப் பாடிட்டு நான் வந்துட்டேன். ஆனா படத்தைப் பார்த்த போதுதான் சாவித்திரிக்காகத் தான் என்னைப் பாட வைத்து இருக்கிறார்கள் என்ற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. எனக்கு இது முன்பே தெரிந்து இருந்தால் அந்தப் பாட்டை பாடியிருக்கவே மாட்டேன் என்றும் அந்தப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஜானகி.
