ஷூட்டிங் டைம்லையே நான் அதை ரஜினி சாரிடம் சொன்னேன்... 'பாபா' பட தோல்வி குறித்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்!

 
Baba rajinikanth s ramakrishnan

கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ப்ளஸ் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா காம்பினேஷனில் ரிலீஸ் ஆன 'அண்ணாமலை, பாட்ஷா' போன்ற படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

ஆனால், இவர்கள் இணைந்து பண்ண கடைசி படமான 'பாபா' ரசிகர்களுக்கு பிடிக்காமல் தோல்வி படங்களின் பட்டியலில் சேர்ந்து விட்டது. இந்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியது ரஜினி தான், வசனத்தை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார்.

Baba shooting spot

சமீபத்தில், எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த பேட்டியில் 'பாபா' குறித்து பேசுகையில் "'பாபா' படம் ஷூட்டிங் டைம்ல நான் ரஜினி சார் கூடவே தான் இருந்தேன். ஒரு பாதி படம் எடுத்து முடித்தபோதே, எனக்கு தெரிஞ்சிருச்சு ரஜினி சார் மனசுல நினைக்குற படத்துக்கும், இப்போ உருவாகிட்டு இருக்குற படத்துக்கும் இடைவெளி இருக்குன்னு.

நான் இதை அவர்கிட்டயும் சொன்னேன். ஆனா, ரஜினி சார் என்ன சொல்லிட்டார்ன்னா, இல்ல சார் ஒரு கட்டத்துல இது சரியா வந்திரும்ன்னு சொன்னார். அப்புறம் அந்த படம் முடிஞ்சு ரிலீஸ் ஆச்சு. இதோட தோல்விக்கான காரணம் என்னன்னா, அந்த படத்துல சொல்லப்பட்ட ஆன்மீக விஷயமும், பொழுதுபோக்கு அம்சங்களும் சரியா இணையல.

Rajinikanth s ramakrishnan

அப்புறம் ரஜினி சாரோட ரசிகர்கள் அவரிடமிருந்து எதிர்பாக்குற படம் வேறயா இருக்கு. ரஜினி சாரே பண்ண 'ஶ்ரீ ராகவேந்திரர்' மாதிரி முழு ஆன்மீக படத்தை பார்க்கவும், 'பாட்ஷா' மாதிரி முழு ஆக்ஷன் படத்தை பார்க்கவும் ஆடியன்ஸ் ரெடியா இருக்காங்க. ஆனா, ரெண்டும் இணைந்த ஒரு படமா இது வொர்க் ஆகல" என்று கூறியுள்ளார்.

From Around the web