'நாடோடிகள்' கதையை கேட்டுட்டு கே.பாலசந்தரும், பஞ்சு அருணாச்சலமும் சமுத்திரக்கனிக்கு கொடுத்த நம்பிக்கை!

 
samuthirakani naadodigal

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் தான் சமுத்திரக்கனி. இவர் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றார்.

வெங்கட் பிரபு, SPB சரண் இருவரையும் வைத்து சமுத்திரக்கனி இயக்கிய முதல் படமான 'உன்னைச் சரணடைந்தேன்' விமர்சன ரீதியாக பாராட்டை குவித்தது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பிறகு விஜயகாந்தை வைத்து எடுத்த 'நெறஞ்ச மனசு' படமும் தோல்வியடைந்தது.

சமுத்திரக்கனி இயக்கிய மூன்றாவது படமான 'நாடோடிகள்' 2009-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் சசிகுமார், விஜய் வசந்த், கஞ்சா கருப்பு, பரணி அனன்யா, அபிநயா ஆகியோர் நடித்திருந்தனர்.

சமீபத்தில், சமுத்திரக்கனி கொடுத்த பேட்டி ஒன்றில் 'நாடோடிகள்' குறித்து பேசுகையில் "நான் 'நாடோடிகள்' படத்தின் கதையை என் குருநாதர் பாலசந்தர் சாரிடம் சொன்னபோது, அவர் இந்த படத்தை உடனே எடுக்க வேண்டியது தான, இதை நீயே நினைச்சாலும் தப்பா எடுக்க முடியாதுன்னு சொன்னார். அப்புறம் பிரபல தயாரிப்பாளரும், எழுத்தாளருமான பஞ்சு அருணாச்சலம் சாரை சந்தித்து கதை சொன்னேன். அவர் நீ இதை எப்படி எடுத்தாலும் ஓடும்ன்னு சொன்னார்" என்று கூறியுள்ளார்.

From Around the web