மறக்க முடியுமா: 27 ஆண்டுகள் நிறைவு செய்த சங்கமம்
பாட்ஷா, ஆஹா வெற்றிப்படங்களை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் சங்கமம். ரகுமான் நாயகனாக நடித்த அந்த படத்தில் விந்தியா நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். மணிவண்ணன், விஜயகுமார், வடிவேலு, டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். அந்த கால கட்டத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த பிரமிட் பிலிம்ஸ் சார்பில் வி. நடராஜன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்தின் மிகப்பெரிஅய் தூண் ஏ.ஆர்.ரகுமான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மழைத்துளி மழைத்துளி, வராக நதிக்கரை ஓரம், சௌக்கியமா கண்ணே, முதல் முறை கிள்ளிப் பார்த்தேன், மார்கழி திங்கள் அல்லவா மற்றும் ஆலால கண்டா போன்ற அனைத்து பாடல்களும் இன்றும் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.

சங்கம வெளியானபோது இப்படம் தில்லானா மோகனாம்பாளின் வெர்சன் என்று பலரும் கூறினார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை ஏனோ பெரிதாக கவரவில்லை. சுமாரான வெற்றியையே பெற்றது.
கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி வெளியான சங்கமம் இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
