ஊரே திரண்டு அடிக்க வந்தாங்க, அஜித் சார் தனியா நின்னு சமாளித்தார்... 'அமர்க்களம்' ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தகராறை பற்றி சொன்ன சரண்!
'தல' அஜித்குமாரின் அடுத்த படமான 'AK64'-க்கு அவருடைய ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் 'குட் பேட் அக்லி'-க்கு பிறகு மீண்டும் அவருடன் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆன படங்களில் 'அமர்க்களம்' அவருக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இது அஜித்துக்கு 25-வது படம். மேலும், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அஜித்துக்கும், ஹீரோயின் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. அதன் பிறகு 2000-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இப்படத்தை இயக்குநர் சரண் தான் இயக்கியிருந்தார். சமீபத்தில், சரண் கொடுத்த பேட்டியில் அஜித் குறித்து பேசுகையில் "'அமர்க்களம்' படத்தோட ஷூட்டிங் சென்னை outer-ல நடந்துட்டு இருந்துச்சு.

நம்ம யூனிட்ல உள்ளவங்களுக்கும், அந்த ஏரியால இருக்குறவங்களுக்கும் இடையே தகராறு வந்திருச்சு. உடனே, ஒரு ஊரே திரண்டு எங்கள அடிக்குறதுக்கு வந்தாங்க. அஜித் சார் வந்து அப்பதான் வளர்ந்துட்டு வர்ற நடிகர். அவர் என்னையும், ஷாலினியையும் opposite side-ல கார்ல உட்கார சொல்லிட்டார்.
படக்குழுவினர் எல்லாரையும் தள்ளி நிக்க சொல்லிட்டார். யாரும் வர வேண்டாம். நான் பேசிக்கிறேன்னு சொல்லிட்டார். அப்போ அந்த ஏரியா மக்கள் முன்னாடி அஜித் சார் மட்டும் தனியா தைரியமா நின்னு, தெளிவா அவங்ககிட்ட பேசி புரிய வச்சு எல்லாரையும் அனுப்பினார். அதுக்கப்புறம் அவரும் நாங்க இருந்த கார்ல வந்து ஏறினார்" என்று கூறியுள்ளார்.
