விஜய் சாருக்காக பண்ண கதை 'வாக்காளன்'... மிஸ்ஸானதுக்கான காரணத்தை விளக்கிய 'சிட்டிசன்' இயக்குநர்!

 
saravana subbiah vijay

முதல் படத்திலேயே சூப்பர் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் சரவண சுப்பையா. இவர் 'தல' அஜித்குமாரை வைத்து எடுத்த படம் தான் 'சிட்டிசன்'.

இந்த படத்தில் அஜித் வித்தியாசமான கெட்டப்களில் வலம் வந்து ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சரவண சுப்பையாவும், அஜித்தும் மீண்டும் 'இதிகாசம்' என்ற படத்துக்காக கூட்டணி அமைப்பதாக இருந்தது.

பின், இது டிராப்பாகி விட்டது. அந்த நேரத்தில் நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார் இயக்குநர் சரவண சுப்பையா. சமீபத்தில், இவர் கொடுத்த பேட்டியில் இது குறித்து பேசுகையில் "'இதிகாசம்' படம் டிராப்பான பிறகு நான் விஜய் சாரை 'ஷாஜகான்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்தேன்.

'வாக்காளன்'-ங்குற தலைப்புல என்கிட்ட ஒரு அரசியல் கதை இருக்கு சார், எனக்கு ஒரு ரெண்டு மணி நேரம் கொடுத்தால் சொல்லிடுவேன் சாருன்னு சொன்னேன். அவர் நான் உங்களுக்கு appointment தர்றேன்னு சொன்னார். ஆனா, அதுக்கு அப்புறம் அவர் என்ன கூப்பிடல. அதுக்கு காரணம் நான் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப violent-ஆ behave பண்ணுவேன்னு அவர்கிட்ட யாரோ என்னை பற்றி ரொம்ப தப்பா சொல்லியிருக்காங்க" என்று கூறியுள்ளார்.

From Around the web