ஹீரோவாக விஜய், வில்லனாக நானா படேகர்... 'அய்யனார்' படம் டிராப்பானது குறித்து பேசிய சற்குணம்!
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்த 'தளபதி' விஜய், இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறார். இவர் நடிப்பில் ரெடியான கடைசி படமான 'ஜன நாயகன்' ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
விஜய் பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், அவர் சில நல்ல கதைகள் கேட்டு நடிக்காமல் மிஸ் செய்திருக்கிறார். அப்படி ஒரு படம் தான் 'அய்யனார்'.
தமிழில் 'களவாணி, களவாணி 2, வாகை சூட வா, நய்யாண்டி, சண்டி வீரன், பட்டத்து அரசன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் சமீபத்தில் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் விஜய்யின் 'அய்யனார்' படம் குறித்து பேசுகையில் "நான் பண்ண முதல் படமான 'களவாணி'-யை பார்க்க விஜய் சார் வந்தார்.
படத்தை பார்த்துவிட்டு வேற லெவலில் இருக்கிறது என்று சொன்னார். அப்போது அவரிடம் 'அய்யனார்'-ங்குற தலைப்புல ஒரு ஸ்க்ரிப்ட் உங்களுக்குன்னு பண்ணி வச்சிருக்கேன் சாருன்னு சொன்னேன். அப்புறம் கதை சொல்ல அவரோட வீட்டுக்கு போனேன். வடிவேலுவை காமெடியனாகவும், பாலிவுட் நடிகர் நானா படேகர் சாரை வில்லனாகவும் வச்சு முழு கதையையும் சொன்னேன். கதையை கேட்டுட்டு நல்லாருக்குங்கண்ணா-ன்னு சொன்னார். ஆனால், அந்த படம் சில காரணங்களால டிராப்பாயிடுச்சு" என்று கூறியுள்ளார்.
