சினிமாவா, கார் ரேஸா... ஷாலினி போட்ட ஆர்டர்... பொட்டிப்பாம்பாக சுருண்ட அஜித்!
அஜித் இப்போது கார் ரேஸ்ல மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால்தான் அவரது படங்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. சினிமா நடிப்பதில் அதனால் தான் நாட்டம் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் பலர் மத்தியில் உள்ளது. கார் ரேஸில் அஜித் நாட்டம் காட்டுவது இப்போது மட்டுமா என்றால் இல்லை. பல வருடங்களாக இருக்கிறது.
அஜித்துக்கும், ஷாலினிக்கும் நடைபெற்ற காலகட்டத்தில் கூட திரைப்படங்களில் நடிப்பதை விட, கார் ரேஸ்சுக்குத் தான் முன்னுரிமை கொடுத்தார். அப்போதெல்லாம் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரும். அதையெல்லாம் ஒதுக்கி விட்டு கார் ரேஸில் நாட்டம் காட்டுவார்.
அப்படி சினிமா வாய்ப்புகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, கார் ரேஸில் தன்னோட கணவர் கவனம் செலுத்துவதைப் பார்த்த அவரது மனைவி ஒரு நாள் இதுபற்றி அஜித்திடம் மனம் விட்டுப் பேசினார். நமக்கு நெருக்கமான நமக்குத் தெரிந்த தொழில் என்னவோ, அதை முதல்ல செய்யுங்க.
ரேஸ் இப்போதைக்கு வேண்டாம் சினிமாவில் கவனம் செலுத்துங்க. இப்போதைக்கு உங்க முழு கவனமும் சினிமா பக்கம் இருக்கட்டும்னு ஷாலினி சொன்னார். அதைக் கேட்டு அஜித் ஒரே நாளில் ரேஸைத் தூக்கிப் போட்டுட்டு சினிமா பக்கம் திரும்பி வந்தார் அஜித். மனைவி பேச்சைக் கேட்டு அவர் இப்படி திரும்பியது அன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு ஆச்சரியமாக இருந்தது.
