'பசங்க' பார்த்துட்டு பாண்டிராஜிடம் Sorry சொன்ன பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்... ஏன் தெரியுமா?

 
Pasanga pandiraj shankar

முதல் படத்துலேயே பல குழந்தைகளை வைத்து எடுத்து எல்லா வீட்டுப் பிள்ளைகளையும் லைக்ஸ் போட வைத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். அது தான் 'பசங்க' படம். இதில் கிஷோர், ஶ்ரீராம், விமல், ஜெயப்பிரகாஷ் நடித்திருந்தனர்.

இதை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தான் தனது 'கம்பெனி புரொடக்ஷன்ஸ்' மூலம் தயாரித்திருந்தார். சசிகுமார் யெஸ் சொல்வதற்கு முன்பு இந்த படத்தின் கதையை பலரிடம் இயக்குநர் பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார். அந்த லிஸ்டில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரும் இருக்கிறார்.

சமீபத்தில், இயக்குநர் பாண்டிராஜ் கொடுத்த பேட்டியில் ஷங்கர் குறித்து பேசுகையில் "நான் ஷங்கர் சாரோட 'S பிக்சர்ஸ்'-க்காக அவர்கிட்ட 'பசங்க' கதையை போய் சொன்னேன். அவருக்கு இந்த கதை பெருசா கனெக்ட் ஆகவே இல்ல. 

Pandiraj Sasikumar

ஆனா, கதை சொல்லும்போது 33 இடங்கள்ல சிரிச்சாரு, ரசிச்சாரு. இருந்தாலும் அவருக்கு பண்ணனும்ன்னு தோணலன்னு என்கிட்ட சொல்லிட்டாரு. அப்புறம் நான் படத்தை சசிகுமார் சாரோட பேனர்ல பண்ணி ரிலீஸ் ஆயிருச்சு.

ஷங்கர் சார் அவர் குடும்பத்தோட போய் படத்தை பாத்துட்டு வந்து எனக்கு போன் பண்ணி, பாண்டிராஜ் இந்த கதையை தான் எனக்கு சொன்னீங்களா?-ன்னு கேட்டார். ஆமா சார் உங்ககிட்ட சொன்ன மாதிரி அப்படியே தான சார் எடுத்திருக்கேன்னு சொன்னேன்.

Shankar family

அவர் இந்த கதையை என்ன judge பண்ணியிருக்கேன் நான். அய்யோ sorry பாண்டிராஜ் sorry sorry. நீங்க என்ன மாதிரி ஒரு படம் பண்ணியிருக்கீங்க. இதை என்கிட்ட வந்து சொன்னீங்க, இதை நான் பண்ணலன்னு சொல்லிட்டேனே பாண்டிராஜ்ன்னு சொன்னார்" என்று கூறியுள்ளார்.

From Around the web