திட்டிய வடிவேலு!.. அப்பா சொன்ன அந்த வார்த்தை.. சண்முக பாண்டியன் பேட்டி...
வடிவேலு திரையுலகில் ஒரு இடத்தைப் பிடிப்பத|ற்கு ராஜ்கிரண் உட்பட பலரும் அவருக்கு உதவியிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். வடிவேலுவுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத போது சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார்.. ஆனால், அந்த படத்தில் நடித்த கவுண்டமணிக்கு அதில் விருப்பமில்லை.. எனவ்வே வடிவேலுவை அவர் சேர்த்துக் கொள்ளவில்லை.
எனவே, விஜயகாந்திடம் போய் அழுதார் வடிவேலு. அதையடுத்து படம் முழுவதும் தனக்கு கொடை பிடிக்கும் வேடத்தில் வடிவேலுவை விஜயகாந்த் நடிக்க வைத்தார். அதோடு வடிவேலுவுக்கு வேஷ்டி, சட்டைகளையும் விஜயகாந்த் வாங்கி கொடுத்ததாக சொல்லப்பட்டது..
ஆனால் நன்றி மறந்த வடிவேலு ஒரு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போய் விஜயகாந்தை கடுமையாக திட்டி விமர்சனம் செய்தார். அவன் இவன்.. வாடா.. போடா என்றெல்லாம் விஜயகாந்தை பேசினார். ஆனால் விஜயகாந்த் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாகவே இருந்தார். அந்த தேர்தலில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் மாறினார்,
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ‘அப்பா வடிவேலு சாருக்கு நிறைய விஷயத்துல உதவி பண்ணி சினிமால பெரிய ஆளாக்கிவிட்டார்.. ஒரு டைம்ல அப்பாவை பற்றி வடிவேலு ரொம்ப அசிங்கமா பேசினாரு.. அப்பா அதை கண்டுக்கவே இல்லை.. ‘சரி விடுங்க.. ஏதோ தெரியாம பேசிட்டான்’ அப்படின்னுதான் சொல்லுவாரு.. அப்பா எப்பலாம் கவலையா இருக்கிறாரோ.. அப்பலாம் வடிவேலு சாரோட காமெடிதான் போட்டு போட்டு பார்த்து நல்லா சிரிப்பாரு’ என கூறியிருக்கிறார்.
