சிவாஜி சார் கேட்டுட்டார்!.. அதிலிருந்து விஜய் மாறிட்டார்!. ஷோபா சந்திரசேகர் சொன்ன பிளாஷ்பேக்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்ன அறிவுரையை விஜய் இப்போது வரை பின்பற்றி வருகிறார்.
 
sivaji vijay
ந்


நடிகர்களுக்கு நேரம் தவறாமை என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் தாமதமாக சென்றால் படபிடிப்புக் குழு அந்த நடிகருக்காக காத்திருக்கும். சினிமாவில் சிம்பும் விஷால் போன்ற நடிகர்கள் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு செல்ல மாட்டார்கள் என்கிற புகார் பல வருடமாகவே இருக்கிறது.

படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் காத்திருக்கும் போது விஷால் வீட்டில்தூங்கிக் கொண்டிருப்பார்.. சிம்பு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தாமதமாக செல்வார் என்று கோலிவுட்டில் சொல்வார்கள். ஆனால் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற சீனியர் நடிகர்கள் எப்போதும் நேரம் தவறாமையை சரியாக கடைபிடிப்பார்கள். அதுவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனெல்லாம்  அவருக்கு சொல்லப்பட்ட நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பே மேக்கப்புடன் தயாராக இருப்பார் என்று சொல்வார்கள்..

நடிகர் திலகத்திடமிருந்து நேரம் தவறாமை கற்றுக் கொண்ட பல நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் ரஜினியும் ஒருவர். அதேபோல் தற்போதைய முதல்வரும் முன்னாள் நடிகருமான விஜயும் படப்பிடிப்புக்கு நேரம் தவறாமையை கடைபிடிப்பார் என பலரும் சொல்வார்கள்.

இந்நிலையில், விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நேரம் தவறாமையை விஜய்க்கு சொல்லி கொடுத்தது அவரின் தந்தை எஸ்.ஏ.சிதான். ஒன்ஸ்மோர் படப்பிடிப்பின் போது சிவாஜி சார் சீக்கிரமாகவே வந்து விடுவார் என்பதால் 10 நிமிடத்திற்கு முன்பே நீ வந்து விட வேண்டும் என எஸ்.ஏ.சி விஜய்க்கு சொல்லிவிட்டார்.

ஒருமுறை விஜய் தாமதமாக சென்று பின் கேட் வழியாக ஏறி குதித்து உள்ளே போனார். சிவாஜி சார் அதை கவனித்துவிட்டார்.. ‘ஏறி குதிச்சு வறியா நீ’ என்று அவரிடம் கேட்டார். அதன்பின் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு செல்வதை பழக்கமாக விஜய் மாற்றிக் கொண்டார்’ என சொல்லியிருக்கிறார்.

Tags

From Around the web