சிரித்து வாழ வேண்டும், ஒளிவிளக்கு படங்களுக்கு இயக்குனரை முடிவு செய்த எம்ஜிஆர்... என்ன ஒரு புத்திசாலித்தனம்?!

 
sirithu vazha vendum, olivilakku

எழுத்தாளர் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் இணைந்து தயாரித்த படம் சிரித்து வாழ வேண்டும். ஜன்ஜீர் என்ற இந்திப்படத்தின் தமிழாக்கம் தான் இந்தப் படம். படத்தை இயக்க யாரை ஒப்பந்தம் செய்யலாம் என எம்ஜிஆருடன் விவாதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எஸ்எஸ்.பாலனையே அந்தப் படத்தை இயக்கச் சொல்லலாம் என்ற யோசனையைத் தெரிவித்தார் எம்ஜிஆர். அந்த படத்தை இயக்குவதற்கு எஸ்எஸ்.பாலனை ஏன் தேர்ந்தெடுத்தேன்னு எம்ஜிஆர் சொன்ன காரணம் தான் ரொம்ப முக்கியமானது. எஸ்எஸ்.வாசன் சந்திரலேகா போன்ற பிரம்மாண்டமான படங்களை இயக்கியவர்.

அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். எனது 100வது படமாக அவரது தயாரிப்பில்  ஒளிவிளக்கு அமைந்தது. ஆனால் அந்தப் படத்தை எஸ்எஸ்.வாசன் இயக்கவில்லை. சாணக்கியாவிடம் அந்தப் படத்தை இயக்குகின்ற பொறுப்பை ஒப்படைத்தார். ஏன் இந்தப் படத்தை நீங்க இயக்கக்கூடாது அப்படின்னு எஸ்எஸ்.வாசன்கிட்ட நான் கேட்டபோது ஜெமினியின் தயாரிப்பான அபூர்வசகோதரர்கள் படத்தை நீங்கள் இரட்டை வேடங்களில் நடிக்க பிரம்மாண்டமா தயாரிக்கணும்னு நான் நினைக்கிறேன் என்றார் எஸ்எஸ்.வாசன்.

ஆனா, கடைசிவரைக்கும் அது நடக்கவே இல்லை. அதுல நான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இப்ப இந்தப் படத்திலும் இரட்டை வேடம். இதை இயக்குவதற்கு எஸ்எஸ்.வாசன் நம்மிடையே இல்லை. அவரது மகன் இருக்கிறார். அவரது மகன் இயக்கத்தில் நடிக்கலாம்கறதுக்காகத் தான் அதை நான் சொன்னேன். அதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு.

இந்தப் படத்தைத் தயாரிக்கிற மணியன், வித்வான் லெட்சுமணன் இருவருமே எஸ்எஸ்.வாசனின் நிழலில் வளர்ந்தவர்கள். அவரது பையனை இயக்குனர் ஆக்குவதுதானே சரியாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார் எம்ஜிஆர். ஒரு படத்தை இயக்குகின்ற பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்த பின்னாலே எம்ஜிஆர் எவ்வளவு சிந்திக்கிறார்; என பாருங்கள். 

sankaran v
sankaran v

3101 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web