மேடையை நோக்கி வந்த பூக்கள்... திக்குமுக்காடிப் போன சிவாஜி... அடுத்து நடந்த அதிசயம்!
சிவாஜியின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் வியட்நாம் வீடு. இது முதலில் நாடகமாகத் தான் அரங்கேறியது. அப்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் எழுத்தில் உருவான அந்தக் கதை முதல்ல நாடகமா நடிக்கப்பட்டு பின் திரைப்படமானது. அந்த நாடகம் முதன் முதலாக நடிக்கப்பட்ட இடம் வடசென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம். நாடகத்தில் நடித்த காலகட்டத்தில் சிவாஜி நடித்த எண்ணற்ற படங்கள் 100 நாள்கள் கொண்டாடி இருந்தன. பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின.
அந்தக் காலத்தில் சிவாஜி திரையில் தோன்றுகின்ற காட்சியில் ரசிகர்கள் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து திரையை நோக்கி வீசுவர். வியட்நாம் வீடு நாடகம் நடைபெற்ற போது அவங்க பணத்தை வீசல. அதுக்குப் பதிலாக கூடை கூடையாகப் பூக்களை மேடையை நோக்கி வீசினர். திடீர்னு ரசிகர்கள் கூடை கூடையாகப் பூக்களை வீசினதனால திக்குமுக்காடிப் போனார் சிவாஜி. அவரால அந்த ஸ்டேஜ்ல நகர கூட முடியல. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. விளக்கை அணைத்து அதை எல்லாம் சுத்தம் செய்த பின்னர்தான் அடுத்த காட்சியில் நடித்தார் சிவாஜி.
இதே நாடகம் மறுமுறை நடைபெற்ற போது அன்னைக்கும் சிவாஜி ரசிகர்கள் இதையே செய்வார்கள் என தெரிஞ்ச உடனே சிவாஜி நாடக மன்றத்தினர் புத்திசாலித்தனமாக ஒரு வேலையை செய்தனர். மறுநாள் சிவாஜி மேடைக்கு வந்தபோது முதல்நாள் எவ்வளவு பூக்களைக் கொட்டினார்களோ அதைப் போல் இருமடங்கு கொட்டினர் ரசிகர்கள். உடனே அந்த நாடக மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டது. ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்தது. அந்த விளக்கின் வெளிச்சத்தில் சிவாஜி வசனம் பேசத் தொடங்கினார். கரண்ட் கட் ஆயிடுத்து.
இந்த ஆத்துல கரண்ட் கட் ஆனா கூட நான் தான் பேசணும். பொறுப்பே கிடையாது என்று பேசிக்கொண்டே சிவாஜி மேடையின் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்குப் போவார். அதற்குள் மற்றவர்கள் அந்தப் பூக்களை எல்லாம் அப்புறப்படுத்துவார்கள். இப்படி அந்த நாடகத்தைத் தொடர்ந்தார்கள். இது மாதிரி பல விஷயங்களை நாடக மேடை சந்தித்தது உண்டு. அதை எல்லாம் சமாளிக்கக்கூடிய திறனை அக்காலத்தில் எல்லா நாடகக்குழுக்களும் பெற்றிருந்தது என்பதுதான் உண்மை.
