சிவாஜியா கொக்கா? அவருக்கிட்ட இதெல்லாம் நடக்குற காரியமா?

 
sivaji ganesan

சிவாஜியை தமிழ்சினிமா உலகின் பிதாமகன், தெய்வப்பிறவி, சிம்மக்குரலோன், நடிகர் திலகம் என்றெல்லாம் சொல்வோம். அவரது நடிப்புக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம். தமிழ் சினிமா உலகின் நடிப்பு அகராதி யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சிவாஜி கணேசன் என்று சொல்லி விடலாம். அதனால் தான் என்னவோ அவரது முதல் படத்தின் முதல் டயலாக்கே சக்சஸ் என்று ஆரம்பித்துள்ளது. அதைத் தக்க வைத்தவர் சிவாஜி. அப்படிப்பட்ட நடிகர் திலகத்தைப் பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி ரசிக்கும்படியாக இருந்தது. சிவாஜிகிட்ட அதெல்லாம் நடக்குமா என்ற ரீதியில் தான் அவரது கேள்விக்குப் பதில் உள்ளது. இது பற்றி பார்ப்போமா... 

சிவாஜி நடிச்ச கதாபாத்திரங்கள்ல அவருக்கு ஒட்டாத கதாபாத்திரங்கள்னு பேசப்பட்டதா? என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.  சிவாஜி நடிச்ச கதாபாத்திரங்கள்ல அவருக்கு ஒட்டாத கதாபாத்திரங்கள் கூட இருந்து இருக்கும். ஆனால் படம் பார்க்கின்ற நீங்கள் அதை உணர முடியாதபடி ஒரு மாயம் செய்து விடுவார் சிவாஜி. அதனால எந்த கதாபாத்திரம் அவருக்கு ஒட்டாம திரையில இருந்ததுன்னு நாம கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் என்கிறார் சித்ரா லட்சுமணன். 

இதில் இருந்து பார்க்கும்போது நடிப்பின் இமயம், நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி என்பது நமக்கு நன்கு தெரிய வருகிறது. அவர் எப்படி நடித்தாலும் அது ரசிக்கும்படியாகத் தான் இருக்கும். இதுல அவருக்கு நடிப்பு வரலன்னு யாராலும் சொல்ல முடியாது. அந்த நடிப்பும் சாதாரணமாக இருந்தாலும் அது அந்த கேரக்டராகவே மாறி இருக்கும். அதுதான் சிவாஜியின் திறமை. இப்படி ஒரு கேரக்டரை சிவாஜியால்தான் நடிக்க முடியும்னு அந்தக் காலத்தில் பலரும் சொல்வார்கள். அது இன்று வரை தொடர்கிறது என்றால் அதற்கு காரணம் நடிப்பை நேசித்து ரசித்து செய்தவர் சிவாஜி என்றால் அது மிகையில்லை. 

Tags

From Around the web