இப்படியா வெளிநாட்டுல அசிங்கம் பண்ணுவீங்க... கோபப்பட்ட சிவாஜிக்கு அடுத்து வந்த சோதனை!
ஸ்ரீதருடைய இயக்கத்தில் சிவாஜி, காஞ்சனா நடித்த படம் சிவந்த மண். இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் பாரீஸில் படமாக்கப்பட்டன. எனக்குத் தெரிஞ்சி வெளிநாட்டுல படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம்னா அதுதான். பாரீஸில் சாப்பாடு எல்லாம் உப்பு சப்பு இல்லாம இருக்கும்கறதால இங்கே இருந்து போகும்போதே பெரிய பாட்டில்ல ஊறுகாயை எடுத்துக் கொண்டு போய்விட்டார் காஞ்சனா.
தினமும் சாப்பிடப் போறதுக்கு முன்னாடி பட்டர் பேப்பர்ல இந்த ஊறுகாயைப் பொட்டலம் கட்டி சித்ராலயா கோபுவும், காஞ்சனாவும் ஓட்டலுக்கு எடுத்துக் கொண்டு போறது வழக்கம். ஓட்டல்ல வச்சி பொட்டலத்துல இருந்து ஊறுகாயைப் பிரித்து சாப்பிடுற இவங்களைப் பார்த்த சிவாஜி, வெளிநாட்டுல இருந்து இப்படி அசிங்கம் பண்றீங்களே. நல்லாருக்கான்னு கேட்டார். அப்படி அவர் கேட்டபோது சித்ராலயா கோபு பதில் ஏதும் சொல்லவில்லை.
சிரித்தபடியே சாப்பிடத் தொடங்கிவிட்டார். இது நடந்து 10 நிமிஷம் கழிச்சி சிவாஜியின் தம்பி சித்ராலயா கோபுவின் பக்கம் கை நீட்டினார். ரெண்டு ஊறுகாய் பொட்டலம் கிடைக்குமான்னு. சித்ராலயா கோபு கொடுத்த உடனே ஒரு ஊறுகாய் பொட்டலத்தைத் தான் எடுத்துக் கொண்டு, இன்னொரு ஊறுகாய் பொட்டலத்தைத் தன் அண்ணனான சிவாஜியின் தட்டுல வைத்ததுதான் தாமதம். சித்ராலயா கோபு அவரைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாராம்.
ஆனால் சிவாஜி என் பக்கம் திரும்பவே இல்லை என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்துள்ளார் சித்ராலயா கோபு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ராலயா லட்சுமணன் தெரிவித்துள்ளார். .