சிவாஜியின் 2 நிறைவேறாத ஆசை... ஒண்ணு அது... இன்னொன்னு எது?

சிவாஜி நடிக்க விரும்பி நிறைவேறாமல் போன 2 கதாபாத்திரங்கள் 
 
sivaji ganesan

சிவாஜியே 2 கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பி அது நிறைவேறாமல் போயுள்ளது. அப்படி என்ன கதாபாத்திரம் அது

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமா உலகின் சிம்ம சொப்பனம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் உயிரோட்டமாக நடிப்பதில் வல்லவர். அவருடைய நடிப்பைத் தான் பார்த்து இன்று வரை உள்ள தமிழ்சினிமா நடிகர்கள் கற்று வருகிறார்கள். எந்த ஒரு காட்சியிலாவது எப்படி நடிக்க வேண்டும்? இந்தக் காட்சியில் கையை எப்படி வைப்பது? எப்படி நடப்பது? முகபாவனையை எப்படி வைப்பது என்று சந்தேகம் வந்துவிட்டால் பழைய சிவாஜி படங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வார்களாம்.

அப்பேர்ப்பட்ட சிவாஜியே 2 கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பி அது நிறைவேறாமல் போயுள்ளது. அப்படி என்ன கதாபாத்திரம் அதுன்னு பார்க்கலாமா... இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜியைப் பொருத்தவரை தந்தை பெரியார் வேடத்திலே நடிக்க வேண்டும் என்பது அவரது தீராத ஆசையாக இருந்தது. அந்த ஆசை அவரால் கடைசி வரை நிறைவேறவில்லை. பெரியார் மாதிரி சிவாஜி நடிக்க ஆசைப்பட்டதைப் போல மூதறிஞர் ராஜாஜி சிவாஜி திப்புசுல்தான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த 2 ஆசைகளையுமே சிவாஜியால் நிறைவேற்ற முடியவில்லை என்று கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன்.

Tags

From Around the web