பானுமதிக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்த சிவாஜி... அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!
நடிப்புச்சக்கரவர்த்தி என்று தமிழ்சினிமா உலகில் இன்று வரை கொண்டாடப்படுகின்றவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். ஒரு மருத்துவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்றால் 100 விதமான குணச்சித்திரங்களை சிவாஜியால் தன்னோட முகத்தில பிரதிபலிக்க முடியும். அந்தளவுக்கு ஆற்றல் உள்ளவராக அவர் இருந்தபோதும், படப்பிடிப்பு தளத்தில் மற்ற நடிகர்களுக்கு நாம் நடிப்பு சொல்லித் தரக்கூடாது. அது தவறு என்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.
நான் நடிக்கின்ற எல்லா படமும் நல்லா வரணும்னு நினைக்கிறவன்தான் நான். ஆனால், அதற்காக மற்றவர்களுக்கு நானாகப் போய் நடிப்பெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டேன். அவர்களே வேண்டிக் கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு நான் உதவுவது உண்டு. அப்படி ஒருமுறை எங்கிட்ட பானுமதி கேட்டுக் கொண்டார்.
அவர் எப்படிப்பட்ட ஆற்றல்மிக்க நடிகை என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவன் நான். அவர் ஒருமுறை அம்பிகாபதி படப்பிடிப்பில் , சிவாஜி இந்த வசனத்தைக் கொஞ்சம் பேசிக் காட்டுங்க என்றார். அதற்குப் பின்னால தான் அந்த வசனத்தை எப்படி பேசினால் நல்லாருக்கும்னு நான் அவருக்கு சொல்லிக் கொடுத்தேன். அவர் அப்படிக் கேட்ட உடனே கூட நான் அவருக்கு அந்த வசனத்தைப் பேசிக் காண்பிக்கவில்லை.
அந்தப் படத்தின் இயக்குனரிடம் போய் அனுமதி பெற்றதற்குப் பின்னாலதான், அந்த வசனத்தை எப்படி பேச வேண்டும் என்று பானுமதிக்கு சொல்லிக் கொடுத்தேன் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி.
