சிவாஜிக்கே தெரியாமல் அறிமுகமான பிரபு... அப்படி என்னதான் நடந்தது?!
நான் அவனை ஒரு போலீஸ் ஆபீசரா ஆக்கணும்னுதான் நினைச்சிருந்தேன். ஆனால் என்னுடைய நம்பிக்கையையும், ஆசையையும் அவன் அழிச்சிட்டான் அப்படின்னு சிவாஜியே
நடிகர் திலகம் சிவாஜி தமிழ்த்திரையுலகில் ஒரு சிம்ம சொப்பனம். அவரது நடிப்பை மெச்சாத கலைஞர்களே இல்லை எனலாம். அவரது சாயல் ஒவ்வொருவரின் நடிப்பிலும் நிச்சயம் இருக்கும். அது அவரது மகனுக்கு எப்படி இருக்கும்? இதுகுறித்து சிவாஜி என்ன சொல்கிறார்னு பாருங்க.
நடிகர் திலகம் சிவாஜியின் கலைவாரிசான இளையதிலகம் பிரபு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாமல் பல லட்சோப லட்ச மக்களின் இதயங்களையும் இன்று கொள்ளை கொண்டுள்ளார். அவரை சினிமா உலகிற்கு அழைத்து வர வேண்டும் என்பது சிவாஜியின் ஆசையாக இருந்ததா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. நான் அவனை ஒரு போலீஸ் ஆபீசரா ஆக்கணும்னுதான் நினைச்சிருந்தேன்.
ஆனால் என்னுடைய நம்பிக்கையையும், ஆசையையும் அவன் அழிச்சிட்டான் அப்படின்னு சிவாஜியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். நான் நடித்த சங்கிலி படத்தில் அவனை அறிமுகப்படுத்தப் போறாங்க. அதுவும் வில்லன் வேடத்துலன்னு எனக்கு தெரியவே தெரியாது. என்னுடைய தம்பியான சண்முகமும், இயக்குனர் சி.வி.ராஜேந்திரனும் செய்த வேலை. பிரபுவுக்கு என்று தனித்திறமை உண்டு. ஆனாலும் பல பேர் என்னை மாதிரியே அவன் நடிக்கிறான்னு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
என்னுடைய பையன் இல்லையா அவன்? அதனால எல்லோரும் பார்க்கும் பார்வை அப்படி இருக்கிறது. என்னை மாதிரியே அவன் நடிக்கிற மாதிரி எல்லோருக்கும் தோணுது. அவனைப் பொருத்தவரைக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். அவன் ஒரு திறமையான ஆள் என்று ஒரு பேட்டியில் சிவாஜி பதிவு செய்துள்ளார்.
