சிவாஜியின் நிறைவேறாத ஆசை… அட மூதறிஞர் சொல்லியும் நடக்கலையே!
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சிவாஜிகணேசன் நடித்த போது அந்த நாடகத்தைப் பார்க்காத அரசியல் ஆளுமைகளே இல்லை என்று சொல்லலாம். பலரும் பார்த்த அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக ஒருநாள் மூதறிஞர் ராஜாஜி வந்து இருந்தார். அவர் நாடகத்தைப் பார்த்து முடித்ததும் மேடையில் அவரை பேச வரும்படி சிவாஜி அவரை அழைத்தார்.
மேடையில் அந்த நாடகத்தைப் பற்றியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றியும் பேசிய ராஜாஜி, வீரபாண்டிய கட்டபொம்மனை நீயோ, நானோ பார்த்திருக்கோமா, யாரும் பார்த்தது இல்லை. ஆனா, இன்னைக்கு நாம எல்லாராலயும் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்க்க முடியுதுன்னா அதுக்குக் காரணம் சிவாஜி தான். அவரைப் பார்க்கும்போது வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்தது போல நமக்குத் தோணுதுன்னா அதுக்கு முக்கியமான காரணம் அவர் அந்தளவு சிறப்பாக நடிப்பதுதான்.
நாடகம் ரொம்ப நல்லாருந்தது. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்னு பாராட்டிப் பேசினார். அந்த நாடகத்தைப் பாராட்டி விட்டுப் புறப்பட்ட ராஜாஜி, சிவாஜியிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். எனக்கு ரொம்ப பிடிச்சது திப்பு சுல்தான். நீங்க சினிமாவுல இருந்து ரிட்டையர்டு ஆகறதுக்குள்ள திப்பு சுல்தானாக நடிக்க வேண்டும் என்று சிவாஜியிடம் அவர் கோரிக்கை வைத்தார். அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக உடனடியாக செயலில் ஈடுபடத் தொடங்கினார் சிவாஜி.
திப்பு சுல்தான் கதை நாடகமாக உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக சிவாஜியால் அந்த நாடகத்தை மேடை ஏற்ற முடியவில்லை. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக என்னுடைய தலையை மொட்டை அடிச்சிக்கக்கூட நான் தயாராக இருந்தேன். அப்படி இருந்தும் ஒரு சில சூழ்நிலைகள் காரணமாக அந்த நாடகத்தை நடத்த முடியவில்லை என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி.
