சூர்யா ஜோதிகாவை லவ் பண்ண காரணமே அவர்தான்!.. லீக் பண்ணிய சிவக்குமார்…

 
சூர்யா ஜோதிகாவை லவ் பண்ண காரணமே அவர்தான்!.. லீக் பண்ணிய சிவக்குமார்…

நடிகர் சூர்யா சினிமாவில் வளர துவங்கிய போது அவர் நடித்த பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜோதிகா. ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் சூர்யாதான் ஹீரோவாக நடித்திருந்தார்..

அதன்பின் இருவரும் காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல், உயிரிலே கலந்தது உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். தொடர்ந்து ஒன்றாக பல படங்களிலும் நடித்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதே நேரம் சூர்யாவின் காதலை அப்பா சிவக்குமார் ஏற்கவில்லை என அப்போது செய்திகள் வெளியானது.

இருவரும் சில வருடங்கள் பொறுமையாக காத்திருந்து சிவக்குமாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உண்டு..

சூர்யா ஜோதிகாவை லவ் பண்ண காரணமே அவர்தான்!.. லீக் பண்ணிய சிவக்குமார்…
radhika

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிவக்குமார் ‘சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொள்ள காரணமே ராதிகாதான்.. உயிரிலே கலந்தது படத்தின் ஷூட்டிங்கில் தனியாக இருந்த சூர்யாவை ஜோதிகாவுடன் பேசு பேசு என சொன்னவர் ராதிகாதான். திரைப்படங்களில் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடித்துள்ளேன். என்னால் எப்படி என் மகனின் காதலுக்கு No சொல்ல முடியும்?' என கேட்டிருக்கிறார்..

From Around the web