எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பிடிச்ச டயலாக் எதுன்னு தெரியுமா? கேட்டுறாதீங்க... விழுந்து விழுந்து சிரிப்பீங்க!
Nov 23, 2024, 19:30 IST
மாநாடு படம் வரும்போது தான் எஸ்.ஜே.சூர்யாவின் பர்பார்மன்ஸ்னா என்னன்னு 2கே கிட்ஸ்க்கே தெரிய ஆரம்பித்தது. வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு... அவரது டயலாக் டெலவரி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விரல் வித்தைக் காரரான சிம்பு தான் படத்தின் ஹீரோ. அவரே அதைக் கேட்டு ஆடிப்போய்விட்டார் என்றே சொல்ல வெண்டும். அந்த டயலாக்கை அவரும் படத்தில் சொல்வார். படமும் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுதான் அப்போது ட்ரெண்டிங் வசனமாக இருந்தது. ஆக மாநாடு படத்தில் சிம்புவுக்கு டஃப் கொடுக்கும் வில்லன். டான் படத்தில் சிவகார்த்திகேயனின் வில்லனாக நடித்து எஸ்.ஜே.சூர்யா அசத்தினார். Also read: கங்குவா போட்ட போடு!.. கண்ணுலையே கலவரம் தெரியுதே?!.. ஆர்.ஜே பாலாஜி என்ன சொல்லிருக்காரு பாருங்க!.. அதே நேரம் நான் வில்லன் கிடையாது. என்னைக்குமே ஹீரோ தான்னும் ஒரு முறை பேசி உள்ளார். அவர் பொம்மை, கடமையைச் செய் ஆகிய படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். குறிப்பாக மார்க் அண்டனி படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து அசத்தினார். இந்தப் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் தான் இப்போது அஜீத்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கி வருகிறார். மார்க் அண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பர்பார்மன்ஸ் அருமையாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா பேசியது கலகலவென சிரிப்பை வரவழைக்கும் விதத்தில் இருந்தது. என்னன்னு பாருங்க.
Mark antony எஸ்.ஜே.சூர்யாவிடம் சைமா விருது வழங்கும் விழாவில் ஆங்கர் சதீஷ் கேள்வி கேட்டார். அது என்னன்னா நீங்க பேசுனதுலேயே உங்களுக்குப் பிடிச்ச டயலாக் எது?ங்கற கேள்வி தான். அதுக்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் எஸ்.ஜே.சூர்யா சொன்ன பதில் தான் ஹைலைட்டாக இருந்தது. 'அவன் கெடக்குறான்டா மயிராண்டி'. Also read: டைட்டில் தொடங்கி படத்தின் ரிலீஸ் வரை!.. சூர்யா 44-க்கு சுடச்சுட அப்டேட் கொடுத்த கார்த்தி சுப்புராஜ்!… இப்படி ஒரு பதிலை சொன்னதும் ஆங்கர்ஸ் உள்பட அரங்கத்தில் உள்ள அத்தனை பேரும் கலகலவென சிரித்து ரசித்தனர். எஸ்.ஜே.சூர்யாவின் இந்த டயலாக் மார்க் அண்டனியில் வரும். அவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர். அதனால் அந்த வட்டாரப்பாஷையில் பேசி மனிதர் படத்தில் அசத்தியிருப்பார்.