எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் நிறைவேறாத ஆசை... எல்லாத்துக்கும் காரணம் அவன்தான்!

 
SP Balasubramaniam

தமிழ்த்திரை உலகில் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என 80களில் கதாநாயகர்களுக்குப் புத்துயிர் கொடுத்தவர் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம். இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் காலத்தால் அழியாதது அவரது மனது மயக்கும் பாடல்கள். 

தமிழ்சினிமா உலகிலே பாடகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரது தணியாத ஆசை ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதுதான். ஒரு காலகட்டத்தில் திரைப்படங்களில் பின்னணி பாடுவதை அடியோடு நிறுத்தி விட்டு திரை உலகின் எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் எல்லோரிடமும் சிறிது காலம் உதவியாளராகப் பணியாற்றி விட்டு, அதற்குப்பிறகு சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்து இயக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. அந்த ஆசையைப் பற்றிப் பல பத்திரிகை பேட்டிகளில் தெரிவித்துள்ளார் எஸ்பி.பாலசுப்பிரமணியம்.

அந்த காலன் பத்திரிகையைப் படிக்கிறவனா இருந்தால் நிச்சயமா அவனுக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஆசை தெரிந்து இருக்கும். அந்தப் பழக்கம் அவனுக்கு இல்லாததால்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அவசரம் அவசரமாக மேலே அழைத்துச் சென்றுவிட்டான்.

அந்த காலன் மட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குக் கொஞ்சம் நேரம் கொடுத்து இருந்தால், அவரது இயக்கத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்து இருக்கும் என்பதுதான் உண்மை. 

Tags

From Around the web