'இயற்கை'-ல நடிக்காமல் மிஸ் பண்ண 2 ஹீரோக்கள்... எஸ்.பி.ஜனநாதனை நம்பிய அருண் விஜய்!
2021-ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய முதல் படம் தான் 'இயற்கை'. இதில் ஹீரோ, ஹீரோயினாக ஷாம், குட்டி ராதிகா நடித்திருந்தனர்.
மேலும், கெஸ்ட் ரோலில் அருண் விஜய் கப்பல் கேப்டனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 2020-ல் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கொடுத்த ஒரு பேட்டியில் இந்த படம் குறித்து பேசுகையில் "'இயற்கை' படத்துக்கு ஹீரோ, ஹீரோயின்லாம் ஓகே பண்ணியாச்சு.
அந்த கப்பல் கேப்டன் கேரக்டர்ல நடிக்க மட்டும் யாருமே ஓகே சொல்லல. அது ஒரு கெஸ்ட் ரோல் தான். ஆனா, அது மிகவும் உயர்வான கேரக்டர். ஏன்னா, படம் முழுக்க ஹீரோயின் அந்த கப்பல் கேப்டனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருப்பா.

நான் விக்ரம் சார் & மாதவன் சார்கிட்டலாம் அந்த கேரக்டர்ல நடிக்க கேட்டேன். அவங்க கதைலாம் கேட்டுட்டு பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. ஆனா, பண்ணல. அப்புறம் நான் பல ஹீரோக்கள்கிட்ட கேட்டு பார்த்தேன், யாருமே பண்ணல.
அருண் விஜய் சார்கிட்ட சொன்னபோது, அவர் என்ன நம்புனார். நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஏன்னா, அவர் ஓகே சொல்லாட்டி, இந்த படம் நகர்ந்திருக்காது. அதுக்கு அப்புறம் உடனே ஷூட்டிங்கிற்கான வேலைகளை தொடங்கிட்டோம்" என்று கூறியிருந்தார்.
