ரஜினி சாரிடம் அரசியல் கதை சொன்னேன், ஆனா... இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் நிறைவேறாத ஆசை!

 
rajinikanth sp jananathan

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தனது 'இயற்கை, ஈ, பேராண்மை' போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

2021-ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். அவர் 2020-ஆம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் கோலிவுட்டின் டாப் ஹீரோவான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை சந்தித்த தருணம் குறித்து பேசுகையில் "ஒரு எம்ஜிஆர் சார் ரசிகனான எனக்கே திரையில் ரஜினி சார் வந்தவுடன் அதிருது. நான் அவருக்காக 'பக்கிரி'-ங்குற தலைப்புல ஒரு அரசியல் கதை வச்சிருந்தேன்.

பாடலாசிரியர் வைரமுத்து சார் தான் எனக்கு ரஜினி சாரை சந்திப்பதற்கு appointment வாங்கி கொடுத்தார். நான் போவதற்கு முன்னாடியே ரஜினி சார் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தார். நான் கதையை சொன்னேன். அவர் கைத்தட்டி ரசிச்சாரு.

எப்படி நம்ம இவ்ளோ நாள் சந்திக்காம இருந்தோம்ன்னு கேட்டார். அப்புறம் ஒரு வாரத்துக்கு பிறகு நான் அவர்கிட்ட போன்ல பேசுனேன். அவர் ஜனா இப்போ இந்த அரசியல் படம் வேண்டாம்ன்னு சொன்னார். நானும் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் பண்ண வேண்டாம் சாருன்னு சொன்னேன்" என்று கூறியிருந்தார்.

From Around the web