மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' தோல்விக்கு இதுதான் காரணம்... ஓப்பனாக சொன்ன எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

 
maniratnam aayutha ezhuthu

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஃபிலிம்மேக்கிங் ஸ்டைல் வைத்திருப்பவர் தான் இயக்குநர் மணிரத்னம். இவர் இயக்கிய ஹைப்பர் லிங்க் படமான 'ஆய்த எழுத்து' 2004-ஆம் ஆண்டு வெளிவந்தது.

இதில் சூர்யா, மாதவன், சித்தார்த் என மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெற்றி பெறவில்லை.

இந்த படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் 'ஆய்த எழுத்து' குறித்து பேசுகையில் "நானும், மணிரத்னம் சாரும் 'ஆய்த எழுத்து' படத்துக்காக கடினமாக உழைத்தோம். அது நன்றாக வந்திருக்குன்னு தான் நாங்க நினைச்சோம். ஆனா, அதுக்கு கிடைச்ச நெகட்டிவ் ரிசல்டை நாங்க எதிர்பார்க்கல.

இந்த படத்துல மூன்று POINT OF VIEW-ல மூன்று கதைகள் காட்டப்படும். முதலில் ஒரு ஹீரோவோட கதை, அப்புறம் ரெண்டாவது ஹீரோவோட கதை, அப்புறம் மூன்றாவது ஹீரோவோட கதைன்னு இருக்கும். அது ஆடியன்ஸுக்கு REPETITIVE ஃபீல் கொடுத்திருச்சு. இது ஒரு காரணம். இன்னொரு காரணம் இந்த மூன்று ஹீரோக்களும் இணைந்து நான்காவது சேப்டரில் பண்ணும் விஷயம் பவர்ஃபுல்லா இல்லையோன்னு தோணுச்சு. அதுனால தான் அந்த படம் ஆடியன்ஸுக்கு வொர்க் ஆகல" என்று கூறியுள்ளார்.

From Around the web