எம்ஜிஆர் படத்துக்கு வைத்த பெயர் கமல் படத்துக்கா? டைரக்டர் ஸ்ரீதருக்கு என்னாச்சு?

 
mgr, sridhar, kamal

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல், அம்பிகா நடித்த படம் நானும் ஒரு தொழிலாளி. இந்தப் பெயரை முதலில் ஸ்ரீதர் சூட்டி இருந்தது எம்ஜிஆரும், அவரும் இணைந்த ஒரு படத்திற்காக. உரிமைக்குரல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடிக்க, ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படம் வெளியானது. அந்தப்படத்தின் படப்பிடிப்பு கூட 2, 3 நாள்கள் நடைபெற்றது.

அந்தப் படத்தின் பெயர் தான் நானும் ஒரு தொழிலாளி. 2 நாள்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு அந்தப் படத்தின் கதை அமைப்பு சரியாக வரும் என்கிற எண்ணம் ஸ்ரீதருக்கு வரல. அதனால எம்ஜிஆரை சந்தித்த அவர், இந்தப் படத்தின் கதையை நான் யோசித்து யோசித்துப் பார்த்தேன். சரியா வரும்னு எனக்குத் தோணல. அதனால இப்போதைக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திடலாமா என்று எம்ஜிஆரிடம் கேட்டார் ஸ்ரீதர்.

ஒரு படைப்பாளியான உங்களுக்கே அந்தப் படத்தின் கதை சரியாக அமையாதுன்னு தோணுறபோது அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்துறதுல என்ன லாபம் இருக்கு? நீங்க நல்லதா ஒரு கதையை ரெடி பண்ணுங்க. அதுக்குப் பின்னால நாம ஆரம்பிச்சிடலாம்னு எம்ஜிஆர் சொல்லி விட்டார். இதற்கு இடையில ஸ்ரீதர் ஒரு கன்னடப் படத்தை இயக்கப் போய் விட்டதால, நானும் ஒரு தொழிலாளி படம் அப்படியே டிராப் ஆனது. அந்தப் பெயரைத் தான் பின்னாடி கமல்ஹாசனை வைத்து எடுத்த படத்துக்கு வைத்தார் ஸ்ரீதர். 

Tags

From Around the web