கதாசிரியருக்கு இவ்ளோ விரோதிகளா? அவருக்காக எம்ஜிஆர் கொடுத்த அந்த வேலை!

 
mgr ulagam sutrum valiban

அந்த காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரோடு தொடர்ந்து பயணித்தவர் தான் கதாசிரியர் ரவீந்திரன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் பார்த்த அவர் எம்ஜிஆரிடம் அந்த படத்தைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லவில்லை. படத்தைப் பார்த்தியே. அதைப் பத்தி எதுவுமே சொல்லலையே என ஒருமுறை எம்ஜிஆர் அவரிடம் கேட்டார். அவர் அப்படி கேட்ட உடனே, ரவீந்திரன் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று சொன்னார். அதற்கு எம்ஜிஆர், அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. அந்த படத்தில என்ன இல்லை. அதை சொல்லுங்க என்றார் எம்ஜிஆர். என்னைப் பொருத்தவரைக்கும் எந்த குறையும் இல்லை. எல்லாமே நிறைவாகத்தான் இருந்தது என்றார் ரவீந்திரன்.

அந்த படத்துல முக்கியமான ஒண்ணு இல்ல. அதைக் கவனிச்சீங்களா என்று கேட்ட எம்ஜிஆர், அந்தப் படத்தோட டைட்டில்ல உங்க பேரு இல்லன்னு சொன்னார். அதனால் என்ன என்றார். என்னுடைய கம்பெனியில உங்களுக்கு விரோதிகள் இருக்காங்கன்னு இப்ப தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன் என்றார் எம்ஜிஆர். அப்படி அவர் சொன்னதும், எத்தனை விரோதிகள் இருந்தால் என்ன? என்னுடைய பெயரைச் சொல்லும்போதே எம்ஜிஆர் ரவீந்தரான்னுதான் கேட்குறாங்க. எனக்கு அந்த நிறைவு போதும் என்று பதில் சொன்னார் ரவீந்திரன். அவர் அப்படி சொன்னாலும், எம்ஜிஆர் அதைக் கேட்டு சமாதானம் ஆகவில்லை.

அந்த படத்தின் கடைசியில கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்று ஒரு விளம்பரம் வந்தது பார்த்தீங்கள்ல. அந்த படத்தைப் பொருத்தவரைக்கும், அந்த படத்தோட முழு வேலையை உங்ககிட்டதான் ஒப்படைக்கப் போறேன். கதை வசனம் நீங்க தான் எழுதணும். நான் ஆப்பிரிக்காவுக்குப் போன போது என்னென்ன எல்லாம் பார்த்தேன்? இந்தப் படத்துல என்னன்னவெல்லாம் வரணும்கற விவரத்தை உங்ககிட்ட சொல்றேன் என்றார் எம்ஜிஆர். ஆற்காடு முதல் அமைச்சர் அலுவலகத்துல உட்கார்ந்து அந்த படத்துக்கான கதையைத் தயார் செய்யுங்கள் என்றார். தன்னால ஒருத்தர் கூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதுல எம்ஜிஆர் எவ்வளவு கவனமா இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

sankaran v
sankaran v

3113 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web