என் வயிற்றை அழுத்தி பார்த்து விஜயகாந்த் செய்த செயல்- மனம் திறந்த தவசி ராஜ்
என் வயிற்றை அழுத்தி பார்த்து விஜயகாந்த் செய்த செயல்- மனம் திறந்த தவசி ராஜ்
தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜய்காந்த். 80, 90 களில் ரஜினிக்கு இணையாக ரசிகர்களை கொண்டிருந்தார். சொல்லப்போனால் கிராமப்புறங்களில் ரஜினியை விட விஜயகாந்திற்கு ரசிகர்கள் அதிகம். 150 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார் கேப்டன். பின்னர் அரசியல் கட்சி துவங்கி எதிர்கட்சி தலைவர்பதவி வரை சென்றவர் இவர்.
திரையுலகில் ஹீரோவிலிருந்து லைட் பாய் வரை ஒரே சாப்பாடு என்ற முறையை கொண்டுவந்தவரும் விஜயகாந்த் மட்டுமே. இவரை பின்பற்றியே பலரும் அதனைச் செய்தனர். அதேபோன்று டி நகரில் இருந்த தனது அலுவலகத்தில் வருபவர்களுக்கு சாப்பாடு போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ் விஜய்காந்த் குறித்த நினைவுகளை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறுகையில், வீரம் வெளஞ்ச மண்ணு படம் சண்டைக் காட்சி முடித்துவிட்டு நான் போய் படுத்திருந்தேன். அப்ப்போது அங்கு வந்த விஜயகாந்த் சார் என் வயிற்றில் கையை வைத்து அழுத்தி பார்த்தார். அயிறு கொஞ்சம் உள்ளே போயிருந்தது. உடனே என்னடா வயிறு இவ்வளவு உள்ளே ப்போயிருக்கு என்று கூறிவிட்டு எழுந்து வாடா சாப்பிடலாம் என்று கூறி தனக்கு வண்டஹ் சாப்பபட்டை எனக்கு போட்டாரு. அதனை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று கூறியிருந்தார்.
கேப்டன் விஜயகாந்த் இந்த உலகை விட்டு சென்றாலும் அவரது உயர்ந்த குணத்தை இந்த உலகம் இருக்கும் வரை பேசிக்கொண்டே இருக்கும் என்பதுதான் உணமை.
