விஜயகாந்த் ஹீரோன்னு சொன்னதும் 'கஜேந்திரா'-வை இயக்க சந்தோஷமாக கமிட்டான சுரேஷ் கிருஷ்ணா!

 
Vijaykanth suresh krissna

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. இவர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'அண்ணாமலை, பாட்ஷா', 'உலக நாயகன்' கமல்ஹாசனை வைத்து இயக்கிய 'சத்யா' போன்ற பல படங்கள் பெரிய வெற்றி பெற்றது.

சுரேஷ் கிருஷ்ணா விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் தான் 'கஜேந்திரா'. இப்படம் இயக்குநர் ராஜமௌலி - நடிகர் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 'சிம்ஹத்ரி' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழில் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் ஏமாற்றத்தை தந்தது. சமீபத்தில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கொடுத்த ஒரு பேட்டியில் கஜேந்திரா குறித்து பேசுகையில் "நான் இயக்குநராகி கமல் சார், ரஜினி சார் அதுக்கு அப்புறம் பல ஹீரோக்களை வைத்து படம் பண்ணியிருக்கேன்.

ஆனா, விஜயகாந்த் சார் கூட பண்றது மட்டும் மிஸ் ஆயிட்டே இருந்துச்சு. அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போ, 'சிம்ஹத்ரி' படத்தோட ரைட்ஸ் வாங்கிட்டு விஜயகாந்த் சாரை வச்சு நீங்க பண்ணனும்ன்னு எனக்கு வாய்ப்பு வந்தது. 'சிம்ஹத்ரி' தெலுங்குல பாத்திருக்கேன், ரொம்ப பிடிச்ச படம் அது.

விஜயகாந்த் சாரோட பண்ணனும்ன்னு சொன்னவுடனே நான் ஓகே சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் சாரையும் நேர்ல சந்திச்சு நான் பண்றேன் சாருன்னு ரொம்ப சந்தோஷமா சொன்னேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த படம் பண்ணோம். படத்தோட பாசிட்டிவ், நெகட்டிவ் பத்தி இப்போ நான் பேசல. எந்த இயக்குநராலையுமே எந்த படம் ஓடும், ஓடாதுன்னு சொல்ல முடியாது. ஆனா, ஒரு இயக்குநரா விஜயகாந்த் சாரோட நான் அந்த படத்துல வொர்க் பண்ண தருணங்களை என்னால எப்பவுமே மறக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

From Around the web