'பாயும் புலி' பாத்துட்டு ராஜமௌலி சாரோட உதவியாளர் சொன்ன விஷயம் எனக்கொரு பாடம்... சுவாரஸ்யத் தகவல் சொன்ன இயக்குநர் சுசீந்திரன்!
தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு' போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுசீந்திரன். 'பாண்டிய நாடு' படத்துக்கு பிறகு மீண்டும் விஷால் - சுசீந்திரன் காம்பினேஷனில் 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் 'பாயும் புலி'.
இதில் ஹீரோயினாக காஜல் அகர்வாலும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியது.
சமீபத்தில், இயக்குநர் சுசீந்திரன் கொடுத்த பேட்டியில் இந்த படம் குறித்து பேசுகையில் "'பாண்டிய நாடு' வந்து முதல்ல வேற ஒரு ஹீரோவுக்காக பண்ண கதை. அப்புறம் விஷாலுக்காக கொஞ்சம் மாத்தி பண்ணோம்.

அந்த படம் நிச்சயம் வெற்றியடையும்ன்னு நான் மட்டுமில்லாம, என்னோட டெக்னீஷியன்கள் எல்லாருமே நம்புனாங்க. ஆனா, அது மிஸ்ஸானதுக்கான காரணம் நான் எழுதின அந்த வில்லன் கதாபாத்திரம் தான். நான் அதுக்கப்புறம் பண்ண ஒரு படத்தோட டிஸ்கஷனுக்கு தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சாரோட உதவி இயக்குநராக பணியாற்றிய கண்ணன் என்பவர் வந்தார்.
அவர் 'பாயும் புலி' பாத்துட்டு சொன்ன விஷயம், நீங்க சமுத்திரக்கனி கேரக்டர் பக்கம் இருந்த நியாயத்தை சொல்லியிருக்கவே கூடாது. அந்த நியாயத்தை சொல்லும்போது, அவன் ஒரு வில்லனாகமா, அவனும் ஒரு ஹீரோவாகிடுறான். ஒரு கதைல வில்லன்-ங்குறவன் வில்லனாவே இருந்தா தான் அந்த படம் வந்து வெற்றியடையும்ன்னு அவர் சொன்னார். அது வந்து எனக்கொரு பாடமா இருந்துச்சு" என்று கூறியுள்ளார்.
