என் கேரியரை காலி செய்த டி.ராஜேந்தரின் அந்த பாடல் - வேதனைபட்ட டி.எம்.சௌந்தர்ராஜன்
60லிருந்து 80 களின் துவக்கம் வரை பின்னணி பாடகர்களில் பிஸியாக இருந்தவர் டி.எம்.சௌந்தர்ராஜன். எம்.ஜி.ஆர் துவங்கி சிவாஜி, ஜெமினி என அந்த கால ஹீரோக்கள் ஆகட்டும் ரஜினி, விஜயகாந்த் என் 80களின் முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடியவர் இவர். இவரது சிறப்பு எம்.ஜி.ஆருக்கு ஒரு பாணியிலும், சிவாஜிக்கு ஒரு பாணியிலும் பாடி அசத்துவதுதான்.
1980ம் ஆண்டு வெளியான படம் ஒரு தலை ராகம். டி.ராஜேந்தர் இசையமைத்து இயக்கிய முதல் படமிது. ஆனால் ஏதோ காராணத்தினால் இயக்கம் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான இப்ராஹிமின் பெயரில் வந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன் ஒரு பாடலை பாடியிருப்பார்.
இது குறித்து ஒருமுறை டி.எம்.எஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தபோது, டி.ராஜேந்தர் ஒரு பாடலை ஒருதலை ராகம் படத்திற்காக பாட அழைத்தார். நான் ஒரு ராசியில்லா ராஜா என துவங்கும் அந்த பாடலை நான் பாட மறுத்தேன். ஆனால் அவர் விடாப்பிடியாக வற்புறுத்தி என்னை பாட வைத்தார். அந்த பாடல் ஹிட் ஆனது. ஆனால் அதற்கு பின் எனக்கு பாட வாய்ப்பே வரவில்லை. அந்த பாடலோடு என் கேரியரே காலியானது என்று கூறியிருந்தார்.
