விஜயகாந்த் இருந்திருந்தால் இதைதான் செய்திருப்பார்- டி.சிவா சொன்ன சம்பவம்

 
விஜயகாந்த் இருந்திருந்தால் இதைதான் செய்திருப்பார்- டி.சிவா சொன்ன சம்பவம்

தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் விஜயகாந்த். திரையுலகில் ரஜினிக்கு இணையாக ரசிகர்களை கொண்ட அவர் ஒரு கட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை துவங்கி அரசியலில் நுழைந்தார். எதிர்கட்சி தலைவர் வரை உயர்ந்த வர் உடல நலக்குறைவால் அரசியலிலிருந்து மெல்ல மெல்ல விலகினார். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

விஜயகாந்த் திரையுலகில் பிஸியாக இருந்த நேரத்தில் தோல்வியால் துவண்டிருந்த விஜய்க்கு கை கொடுக்க செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடித்து கொடுத்தார். இந்த படமே விஜயை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றது.

விஜயும் கிட்டத்தட்ட விஜயகந்த் பார்முலாவையே பின்பற்றினார். திரையுலகில் பீக்கில் இருக்கும்போதே தவெக கட்சியை தொடங்கி முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றார். தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில் பிரபல தயரிப்பாளர் டி.சிவா விஜய் குறித்து கூறிய கருத்து வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் விஜய்க்கு ஓட்டு போட்டு இருக்காங்க. அவர் தான் முதல்வர். இந்நேரம் கேப்டன் இருந்திருந்தால் கண்டிப்பாக விஜய் கூடத்தான் சேர்ந்திருப்பார். விஜயகாந்த் சார் மனசுதான் விஜய் சாருக்கும் இருக்கு. விஜயகாந்த் சாரோட எல்லா விசயத்தையும் விஜய் நிறைவேற்றுவார். அவர் ஒன்றும் அன்னக்காவடி இல்லை, எல்லாவற்றையும் பார்த்தாச்சு, அவர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்துள்ளார் என்று டி.சிவா கூறினார்.

From Around the web