நேரத்துக்கு வரச் சொன்ன கம்பெனி... லெப்ட் அண்ட் ரைட் கொடுத்த ஸ்ரீதர்!
நாராயணன் கம்பெனி பட்டண்ணாகிட்ட இவர்தான் ஸ்ரீதர் ரத்த பாசம், எதிர்பாராதது படத்துக்கு எல்லாம் வசனம் எழுதியவர். ரொம்ப பிரமாதமா எழுதுவார்னு அறிமுகம் செய்து வைத்தார் ஜெமினிகணேசன். அந்த அறிமுகத்துக்குப் பின்னால ஸ்ரீதர் எழுதுவது என்று முடிவானது. வசனத்துக்கு ஏதாவது மாறுதல் தேவைப்பட்டா நீங்க வந்து எழுதிக்கொடுக்கணும்னு பட்டண்ணா ஸ்ரீதரைக் கேட்டுக்கொண்டார்.
அதுவும் அவருக்கு நியாயமாகப்பட்டது. ஸ்ரீதருக்கு அதுல எந்த ஆட்சேபனையும் இல்லை. நிச்சயமாக நான் மாற்றிக் கொடுக்குறேன்னு ஒப்புக்கொண்டார். அதுக்கு அப்புறம் பட்டண்ணா போட்ட ஒரு நிபந்தனை தான் அந்த நிறுவனத்துல ஸ்ரீதர் பணிபுரிய முடியாத அளவு ஒரு சூழலை ஏற்படுத்தியது.
நீங்க தினமும் காலைல 9மணிக்கு ஆபீஸ் வந்துடணும்னு சொன்னார் பட்டண்ணா. அதைக் கேட்ட உடனே ஸ்ரீதருக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லன்னு தான் சொல்லணும். நான் இங்கே கதாசிரியர் வேலை பார்க்கப் போறேனா, குமாஸ்தா வேலை பார்க்கப் போறேனா? கதையைப் பொருத்த வரைக்கும் பகல்ல எழுதுவேன். ராத்திரி எழுதுவேன். எப்போ வேணாலும் எழுதுவேன். நினைச்ச நேரத்துல எழுதுவேன்.
அதனால உங்க ஆபீஸ் கிளார்க் மாதிரி தினமும் காலைல 10 மணிக்கு எல்லாம் வர முடியாதுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டார் ஸ்ரீதர். அதன்பிறகு நடந்தது என்னனன்னு சொல்லவா வேணும்? ஸ்ரீதருக்கு அங்கு வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கல. நாராயணன் கம்பெனியைத் தொடர்ந்து மாடர்ன்ஸ் தியேட்டர்ல இருந்து அழைப்பு வந்தது. அதன் அனுபவம் இன்னும் சுவாரசியமானது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
