எம்ஜிஆர், சிவாஜி படங்களை எல்லாம் ஓரங்கட்டிய அந்தப் படம்! இயக்குனர் யாருன்னு தெரியுமா?

 
sivaji and mgr

மாயாஜாலப்படங்களைப் பொருத்தவரை அப்படிப்பட்ட படங்களை உருவாக்குவதில் மன்னராகத் திகழ்ந்தவர்தான் இயக்குனரான பி.விட்டலாச்சார்யா. அவருடைய படங்களுக்கு எல்லா மொழியிலும் வரவேற்பு இருந்தது. அது மட்டும் இல்லாம சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் அவரது ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர். அவரது படங்களைப் பொருத்தவரை படப்பிடிப்புக்கு வராம நடிகர், நடிகைகள் கால்ஷீட்டுக்கு டிமிக்கி கொடுக்குற வேலை என்பது நடக்கவே நடக்காது.

அதுக்கு காரணம் விட்டலாச்சார்யா மேல உள்ள பயம். யாரு வரலன்னாலும், கதையில ஒரு மந்திரவாதியை வைத்து இவரை புலியா மாத்து. ஆடா மாத்து. சிங்கமா மாத்து என்று மாற்றி விடுவார் விட்டலாச்சார்யா. அதுக்குப் பயந்தே எல்லா நட்சத்திரங்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு அவரது படப்பிடிப்புக்குப் போய்விடுவார்கள். திரை உலகிலே அவர் எப்படிப்பட்ட வெற்றியாளராகத் திகழ்ந்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

குருவை மிஞ்சிய சிஷ்யலுங்கற தெலுங்கு படத்தை எடுத்தாங்க. அந்தப் படத்தை வீரத்திலகம்கற பேருல தமிழ்ல மொழிமாற்றம் செய்து வெளியிட்டாங்க. அந்தப்படம் 1963ம் ஆண்டு தீபாவளித் தினத்தன்று வெளியானது. அந்த தீபாவளிக்கு எம்ஜிஆர் நடித்த ராஜா தேசிங்கு, சிவாஜி நடித்த ஒரு படம் உள்பட 6 திரைப்படங்கள் வெளியாயின. ஆனால் இந்த வீரத்திலகம் மட்டும்தான் 100 நாள்களைக் கடந்து ஓடியது. அதுதான் விட்டலாச்சார்யாரின் தனிச்சிறப்பு. 

Tags

From Around the web