பாரதிராஜா அதை விரும்ப மாட்டாராமே... என்ன இப்படி படக்குன்னு சொல்லிபுட்டாரு?

 
bharathiraja

தமிழ்சினிமா உலகில் இயக்குனர் இமயம்னு எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவரது படங்கள் எல்லாமே கிராமிய மணம் வீசுபவை. பாடல்களும், காட்சி அமைப்புகளும், கதாபாத்திரங்களும், கதையும், இடங்களும் உயிரோட்டமாக இருக்கும். வசனம் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கும் ரகம். இவ்ளோ ரசனை உள்ள இவருக்கு அது மட்டும் பிடிக்காதாம். அது என்னவா இருக்கும்? வாங்க இந்த பிரபலம் என்ன சொல்றாருன்னு பார்ப்போம். 

பாரதிராஜாகிட்ட இருந்து வர்ற எல்லா டைரக்டரோட படங்களிலும் காமெடி அதிகமா இருக்கும். ஆனா பாரதிராஜா படங்கள்ல காமெடி அதிகமா இருக்காது. எதனால பாரதிராஜா படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இல்லை என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்கிறார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் தெரிவித்துள்ளார். 

பாரதிராஜாவின் பல படங்கள்ல நகைச்சுவை காட்சிகளை எல்லாம் படமாக்கி விட்டு அவற்றை நீக்கிய சம்பவங்கள் எல்லாம் நடந்துருக்கு. உதாரணத்துக்கு சொல்லணும்னா கடலோர கவிதைகள் படத்துல நானும், செந்திலும் நடித்த நகைச்சுவை காட்சிகள் ஏறக்குறைய 2000 அடிகள் படமாக்கப்பட்டன. எல்லாத்தையும் கடைசி நேரத்துல அந்தப் படத்துல இருந்து நீக்கி விட்டார் டைரக்டர். படத்தோட நீளத்தைக் குறைக்கணும்னா முதல்ல நகைச்சுவை காட்சிகளைத்தான் வெட்டுவார் பாரதிராஜா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Tags

From Around the web