எம்ஆர்.ராதாவின் கணிப்பைப் பொய்யாக்கிய இயக்குனர்... அட அந்தப் படமா?
சினிமாவைப் பொருத்தவரைக்கும் ஒருவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுவிட்டால் தொடர்ந்து அதுமாதிரி பாத்திரங்களில் தான் நடிக்க வைப்பார்கள். இது காலம் காலமாக இருந்து வருகிறது. அப்படித்தான் எம்ஆர்.ராதாவையும் பல படங்களில் வில்லனாகவே பயன்படுத்தினார்கள். ஒருசில திரைப்படங்கள்ல அப்பாவாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைச்சாலும், அந்த அப்பா வேடத்திலும் கொஞ்சம் வில்லத்தனம் கலந்து இருக்கும்.
இப்படிப்பட்ட படங்களில் தான் அப்போது எம்ஆர்.ராதாவை நடிக்க வைத்தார்கள். அந்த சூழ்நிலையில அவருக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தர வேண்டும் என்று விரும்பினார் இயக்குனர் கே.சங்கர். ஜெமினிகணேசனும், சரோஜாதேவியும் ஜோடியாக நடித்த அந்தப் படத்தில் ஒரு கனமான குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்து இருந்தார். அந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சியிலே நீங்கள் அழுது நடிக்க வேண்டும் என்று எம்ஆர்.ராதாவிடம் கே.சங்கர் சொன்னார்.
அதற்கு, நான் அழுது நடிக்கத் தயார். நான் அழுது நடிச்சா யார் பார்ப்பாங்கன்னு அவரைப் பார்த்து கேள்வி கேட்டார் எம்ஆர்.ராதா. இந்தப் படத்துக்கு வசனம் எழுதி இருப்பவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அவர் எழுதிய வசனத்தை நீங்கள் பேசி அழுது நடிச்சீங்கன்னா நிச்சயமாக ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பைத் தருவார்கள் என்று தைரியமாக எம்ஆர்.ராதாவை நடிக்கச் சொன்னார் கே.சங்கர். அந்தக் காட்சி திரையிலே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற போதுதான் கே.சங்கர் சொன்னது எந்தளவுக்கு சரி என்பதை எம்ஆர்.ராதா உணர்ந்து கொண்டார். அந்தப் படம் தான் கைராசி. 1960ல் வெளியானது. அந்தக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
